கீழக்கரையில் களை கட்டிய கரும்பு வியாபாரம்.. நேற்று இரவு முதல் களை கட்டிய பொங்கல் குதூகலம்..

கீழக்கரையில் பொங்கல் கொண்டாட்டத்தின் ஆரம்பம் நேற்று முதல் தொடங்கியது. பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை கரும்பைக் கட்டு கட்டாக வாங்கி செல்வது அனைவருடைய எண்ணத்திலும் ஆனந்தத்தையும் சந்தோஷத்தையும் தருவதை காண முடிகிறது.

இத்தருணத்தில் திருவிழா சார்ந்த பொருட்களாகிய கரும்பு, பனைக்கிழங்கு, மஞ்சள், துளசி, இஞ்சி, மல்லிகைப்பூ போன்ற பொருட்கள் அமோகமாக கடைத் தெருட்களில் விற்பனையாவதை காண முடிகிறது.

இன்று விழாக்கால விலையாக 15 எண்ணம் கொண்ட கரும்பு கட்டின் விலை 250 முதல் 300 வரை தரம் வாரியாக விற்கப்படுகிறது. 25 உள்ள பனைக்கிழங்கு 50 ரூபாயக்கும், 100 எண்ணம் கொண்ட மல்லிகைப்பூ 60 முதல் 75ரூபாய் வரை விற்கப்படுகிறது.

ஒருபுறம் மக்கள் திருவிழா மகிழ்ச்சியில் நிறைந்திருந்தாலும் பணத்தட்டுப்பாடு மற்றும் ஜல்லிக்கட்டு தடை போன்ற ஆதங்கமும் குறைந்தபாடில்லை…

உதவிக்கரம் நீட்டுங்கள்..