மதுரை மாநகர காவலர்களுக்கான பொங்கல் பண்டிகை விளையாட்டுப் போட்டிகள்..! . 2024-ம் ஆண்டிற்கான பொங்கல் திருநாளை முன்னிட்டு காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினருக்கான பொங்கல் பண்டிகை விளையாட்டுப் போட்டிகள் மதுரை மாநகர காவல் ஆணையர் Dr.லோகநாதன்,IPS., அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு 06.01.2024 மற்றும் 07.01.2024 ஆகிய இரண்டு நாட்களாக மதுரை மாநகர காவல்துறை சார்பில் மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. . இதில் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு ஓட்டப்போட்டி மற்றும் குண்டு எறிதல் போட்டிகள் நடைபெற்றது. மேலும் சிறுவர், சிறுமிகளுக்கான ஓட்டப் போட்டி, சைக்கிள் போட்டி, கட்டுரை போட்டி, வினா விடை, ஓவியப் போட்டி, நீளம் தாண்டுதல், துப்பாக்கி சுடுதல், சிலம்பம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தைச் சார்ந்த சிறுவர், சிறுமியர் ஆர்வமுடன் கலந்துகொண்டு விளையாடினார்கள். இந்த பொங்கல் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி சுற்று, பரிசளிப்பு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் 13.1.2024 அன்று நடைபெற உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.