Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ஆலங்குளம் காவல் நிலையத்தில் கொரோனா பாதிப்பு; காவல் நிலையம் மூடல்-தடுப்பு சுகாதார பணிகள் தீவிரம்…

ஆலங்குளம் காவல் நிலையத்தில் கொரோனா பாதிப்பு; காவல் நிலையம் மூடல்-தடுப்பு சுகாதார பணிகள் தீவிரம்…

by ஆசிரியர்

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. பொதுமக்களிடையே கொரோனா குறித்த அச்சம் எழுந்துள்ளது. கொரோனா தடுப்பு,கண்காணிப்பு, சுகாதார பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காவல் நிலையம் தற்போது மூடப்பட்டு தாசில்தார் பட்டமுத்து தலைமையில் சுகாதார துறையினர் கிருமி நாசினி தெளித்து தடுப்பு,சுகாதார பணிகளை மேற்கொண்டனர். இந்த காவல் நிலையத்தின் பிற பணிகள் மகளிர் காவல் நிலையத்தில் வைத்து நடைபெறுகிறது. மேலும் மூடப்பட்ட காவல் நிலையம் ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

ஆலங்குளம் காவல்நிலையத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்ட காவலர்கள் பற்றிய விபரம்

1 .SI.பாரத்லிங்கம் 38/2020, உதவி ஆய்வாளர் (2011 Bhtch) த/பெ.ரத்தினம், சுடலைமாடன் கோவில் தெரு, S.V.கரை,

21.06.2020-ம் தேதி நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பரிசோதனை செய்ததில் கொரனோ தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. (மனைவி முருகேஸ்வரி 35/2020, மகன்கள் தீபக்குமார் 12/2020, லிங்கேஸ்குமார் 10/2020) குடும்பத்துடன் ஆலங்குளம் உதவி ஆய்வாளர் குடியிருப்பில் குடியிருந்து வருகின்றனர்.

2. கிருஷ்ணன் 45/2020, HC 608 த.பெ.மணிமாறன், கீழமுத்தாரம்மன் கோவில் தெரு, தென்காசி.

21.06.2020-ம் தேதி தென்காசி காட்டு பாவா பள்ளிவாசல் அருகே உள்ள ஆரம்ப சுதாதார நிலையம் PH-ல் பரிசோதனை செய்ததில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. (மனைவி மகேஸ்வரி 38/2020, முனீஸ் பிரகாஷ் – 15 சத்திய பிரகாஷ்.12) குடும்பம் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!