Home செய்திகள் லத்தி எடுக்காதீங்க, ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்ப்படுத்தாதீங்க..

லத்தி எடுக்காதீங்க, ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்ப்படுத்தாதீங்க..

by Askar

அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டிருப்போர், பொது சேவை செய்வோர், நாளிதழ் வினியோகம் செய்வோர் மீது, போலீசார் தடியடி நடத்தியது குறித்து, பல்வேறு விவாதங்கள் நடைபெற்று. இதை சுட்டிக்காட்டி, ‘ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம்’ என, போலீஸ் அதிகாரிகளுக்கு, முதல்வர், இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் உத்தரவை தொடர்ந்து, போலீசாருக்கு உயர் அதிகாரிகள், அறிவுரைகள் வழங்கி உள்ளனர். சென்னை, பூக்கடை போலீஸ் துணை கமிஷனர், ராஜேந்திரன், ‘வாட்ஸ் ஆப்’ ஆடியோ வழியாக, போலீசாருக்கு வழங்கியுள்ள அறிவுரைகள்: ஊரடங்கு பணியில் உள்ள போலீசார், கையில் லத்தி வைத்திருக்கக் கூடாது. ஊரடங்கு உத்தரவு எதற்கு என, மக்களுக்கு புரியவைக்க வேண்டும். பொது மக்களை மிரட்டவோ, பயமுறுத்தவோ கூடாது; அவர்களை அடிக்க கூடாது. இவ்வாறு நடந்தால், சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும்.

பொது மக்களுக்கு விபரீதம் புரியவில்லை. அவர்களிடம் பக்குவமாக பேசி, புரியவைத்து அனுப்புங்கள். கால்நடை தீவனங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை விட்டு விடுங்கள். வங்கி ஏ.டி.எம்.,மிற்கு செல்வோர், அத்தியாவசிய தேவைக்காக செல்கின்றனர். கடைக்கு பொருட்கள் வாங்க வரும் மக்களிடம், சமூக விலகல் குறித்து சொல்லுங்கள். ஒரு அடி இடைவெளி விட்டு, பொருட்கள் வாங்க அறிவுறுத்தலாம். துணிக்கடை, நகைக் கடைகள் முறையாக மூடப்பட்டுள்ளதா என, கண்காணியுங்கள். சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்களை வழிமறிக்க வேண்டாம்; அதை, போக்குவரத்து காவலர்கள் பார்த்துக் கொள்வர். பொது அறிவை பயன்படுத்தினால், இது போன்ற பிரச்னைகள் வராது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!