Home செய்திகள் சென்னை காவல்துறையினரால் நீக்கப்பட்ட இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) ஊழியர்….

சென்னை காவல்துறையினரால் நீக்கப்பட்ட இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) ஊழியர்….

by ஆசிரியர்

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் ஊழியர் சேத்துப்பட்டு காவல்நிலைய துணை ஆய்வாளர் இளையராஜாவால் தாக்கப்பட்டதற்கு இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு ஒரு திருமண நிகழ்விற்கு சென்றுவிட்டு திரும்பிய சகோதரர் ஹாரூனின் வாகனத்தை ஈகா திரையரங்கு அருகில் நிறுத்திய காவல்துறையினர் அவரிடம் ஆவணங்களை கேட்டுள்ளனர். தன்னிடமிருந்த ஆவணங்களின் நகல்களை காட்டிய பிறகு அசல் ஆவணங்களை கேட்டுள்ளனர். வீட்டில் இருக்கிறது என்றதும் பணம் கேட்டுள்ளனர். பணம் தர முடியாது, காவல் நிலையத்திற்கு வந்து அசல் ஆவணங்களை கொடுத்து வாகனத்தை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறிய பிறகும் விடாமல் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஒரு கட்டத்தில் துணை ஆய்வாளர் இளையராஜா என்பவர் லத்தியால் பத்துக்கும் மேற்பட்ட முறை கையிலும் காலிலும் தாக்கியுள்ளார். இதில் ஹாருனின் கைகளில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.

சமீப காலமாக பொதுமக்கள் மீது காவல்துறையினர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதும், தாக்குதல் நடத்துவதும் பெருகி வருகின்றது. மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையே இப்படி வேலி பயிரை மேய்வது போல தரமற்று நடந்து கொள்வது ஆபத்தானது. மக்களின் நண்பன் காவல்துறை என்று வாய்வார்த்தைகளில் மட்டும் சொல்வது போதாது. அதனை செயலிலும் காட்ட முயற்சிக்க வேண்டும்.

இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன் தாக்கிய சேத்துப்பட்டு துணை ஆய்வாளர் இளையராஜா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு வலியுறுத்துகின்றது.

இனி இதுபோல காவல்துறை அராஜகங்கள் நடக்காதவாறு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரசுக்கும், காவல்துறைக்கும் SIO வலியுறுத்துகின்றது என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!