ஏர்வாடியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் ஆய்வு..

இந்திய பிரதமரின் அனைவருக்கும் வீடு ( PMAY – Pradhan Mantri Awas Yojana) வீடு திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் மற்றும் நலிந்த சமுதாயத்திற்காக தமிழகத்தில் மூன்று லட்சத்திற்கும் மேலான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அதன் வரிசையில் கீழக்கரை ஏர்வாடியில் அருந்ததியர் குடியிருப்பில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் / கடலாடி ஊராட்சி ஒன்றிய மண்டல அலுவலர் மற்றும் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஆய்வு இன்று (22-06-2017) ஆய்வு செய்தனர்.