Home செய்திகள் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்த தூத்துக்குடியில் அவுட் ரீச்(Out reach) நிகழ்ச்சி

பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்த தூத்துக்குடியில் அவுட் ரீச்(Out reach) நிகழ்ச்சி

by mohan

S.P.அருண் பாலகோபாலன், தலைமையில் போலீஸ் – பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்த தூத்துக்குடியில் அவுட் ரீச்(Out reach) நிகழ்ச்சி: திரளான பொதுமக்கள் பங்கேற்பு.தூத்துக்குடி மாநகர காவல் துறை சார்பாக தூத்துக்குடி டூவிபுரம் பூங்கா அருகில் போலீஸ் – பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்த அவுட் ரீச்(Outreach) நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், தலைமையில் நடைபெற்றது.போலீஸ் – பொது மக்கள் நல்லுறவை மேம்படுத்த இந்த அவுட் ரீச் நிகழ்ச்சி புதிதாக காவல்துறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இது பொது மக்களுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் அன்றாட பிரச்சினைகள் மற்றும் நீண்ட நாட்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பது இதன் முக்கிய  நோக்கமாகும்.

பொதுமக்கள், தங்கள் குறைகளை தீர்ப்பதற்கு காவல் நிலையம் வர வேண்டிய அவசியமில்லை. அந்தந்த பகுதி அவுட் ரீச் போலீசாரிடம் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.தற்போது இந்த அவுட்ரீச் திட்டத்தை மத்திய பாகம் காவல் நிலையத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு சுமார் 92,000 மக்கள் வசிக்கின்றனர். இங்கு 25, 26, 27, 38, 39, 40 மற்றும் 41 என 7 வார்டுகளில் 67 தெருக்கள் உள்ளன. ஒவ்வொரு போலீசாருக்கும் 4 அல்லது 5 தெருக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இதற்கென வாட்ஸ் குரூப் ஆரம்பிக்கப்பட்டு அதில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, போலீசார் மற்றும் இங்குள்ள முக்கியஸ்தர்கள் இந்த குரூப்பில் பங்கு பெற்றுள்ளனர். பொதுமக்கள் தரும் புகார்கள் இதில் பதிவு செய்யப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை மட்டுமல்லாமல் வேறு துறை சம்பந்தப்பட்ட புகாராக இருந்தாலும், அது சம்பந்தமாக புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட துறைக்கோ அல்லது மாதந்தோறும் நடைபெறும் மாதாந்திர சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்தந்த பகுதிக்கு ஒதுக்கப்பட்ட போலீசார், அவரவர் பகுதிகளுக்கு அடிக்கடி சென்று ரோந்து சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு, அதை உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிவிப்பார்கள். அந்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்விழா தூத்துக்குடி மாநகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மத்திய பாகம் காவல் ஆய்வாளர்  ஜெயப்பிரகாஷ்  செய்திருந்தார்.இதில் வியாபாரிகள் சங்கத் தலைவர்கள், பங்குதந்தை லயோலா உட்பட பொதுமக்கள் மற்றும் தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் தங்க கிருஷ்ணன், முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார்,தெர்மல்நகர் காவல் ஆய்வாளர் ரஞ்சித், தென்பாகம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார்,காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் பங்கு பெற்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!