Home செய்திகள் பாலக்கோட்டில் விதிமுறை மீறும் ஆட்டோக்கள் விபத்து ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பாலக்கோட்டில் விதிமுறை மீறும் ஆட்டோக்கள் விபத்து ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

by mohan

தர்மபுரி  மாவட்டம் பாலக்கோட்டிலிருந்து கிராம புறங்களுக்கும், நகர்ப்புறங்களுக்கு சுமார்  200க்கும் மேற்பட்ட ஆட்டோகளை இயக்கி வருகின்றனர். பாலக்கோடு பஸ் நிலையத்தில் பேருந்துகள் வரும்போது பேருந்துகளை இடை மறைப்பதும், சந்துகளில் உள்ளே நுழைத்து ஆட்டோக்களை இயக்குவதால் அதிக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் ஆட்டோகளில் விதிமுறைகளை மீறி 10க்கும் மேற்பட்டவர்களை பொதுமக்களை ஏற்றுவதும், கூடுதலாக பூசா மூட்டை, தக்காளி கூடை, பிரோ, கட்டில், பிளாஷ்டிக் பைப்புகள் போன்றவை ஏற்றுவதால் விவபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும் பாலக்கோட்டில் இருந்து ஆத்துக்கொட்டாய், கரகூர், பெல்ரம்பட்டி, கேசர்குளி அணை மற்றும் எலங்காலப்பட்டி, தும்பலஅள்ளி, பெரியம்பட்டி, திருமல்வாடி பாப்பாரப்பட்டி போன்ற ஊர்களுக்கு சுமார் 15கி.மீ தூரத்தில் இருந்து 20கி.மீ தூரம் வரை பொதுமக்கள் மற்றும் அதிக பாரங்களை ஏற்றி செல்லுவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பொதுமக்களுக்கு பலத்த காயம் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இதுகுறித்து பலமுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்க்கும், பாலக்கோடு காவல்துறைக்கும் புகார் அளித்தும் மெத்தன போக்கை கடைப்பிடித்தும், பெயரளவில் சில நாட்கள் மட்டுமே நடைமுறை படுத்தப்பட்டு மீண்டும் தொடர்கதையாக உள்ளது. இதில் சில ஆட்டோக்கள் உரிமம் இன்றியும், சில ஓட்டுனர்களுக்கு வானக ஓட்டுனர் உரிமம் இன்றியும் இருப்பாதல் பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகம் உரிய நடடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!