Home செய்திகள்கீழக்கரை செய்திகள் TARATDAC போராட்ட அறிவிப்பு எதிரொலி -உடனடியாக மாற்றுத்திறனாளிக்கு உதவித்தொகை வழங்க உத்தரவு..

TARATDAC போராட்ட அறிவிப்பு எதிரொலி -உடனடியாக மாற்றுத்திறனாளிக்கு உதவித்தொகை வழங்க உத்தரவு..

by ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தரேவு கிராமத்தில் வசிக்கும் இப்ராஹீம் என்பவரது மகன் முஜீபுர் ரஹ்மான். மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளியாகிய அவருக்கு வருவாய்த்துறை மூலமாக வழங்கப்படும் உதவித்தொகையை அய்யம்பாளையம் ஸ்டேட் பேங்க் வங்கி நிர்வாகம் முஜீபுர் ரஹ்மானின் வங்கிக்கணக்கில் ஆதார் இணைக்கவில்லை என்கிற ஒரே காரணத்திற்க்காக அவருக்கு வருவாய்த்துறை மூலமாக வழங்கிய உதவித்தொகை பணம் ரூபாய் 7000ஐ பிடித்து வைத்துக்கொண்டு ஆதார் கொடுத்தால்தான் பணத்தை தருவோம் என கூறியது.

அதனை அடுத்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக்குழுவின் சார்பில் உடனடியாக தலையிட்டு நேரடியாக முஜீபுர் ரஹ்மானின் வீட்டிற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் பகத்சிங் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் வனிதா, ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகவள்ளி ஆகியோர்களால் களஆய்வு செய்யப்பட்டு, பின்னர் இப்பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

உச்சநீதிமன்றம் ஆதாரை கட்டாயப்படுத்தக்கூடாது என பலமுறை உத்தரவிட்டும் ஆதார் இணைக்கவில்லை என்கிற காரணத்திற்க்காக பணம் தர மறுக்கும் SBI வங்கி நிர்வாகத்தை கண்டித்தும், உடனடியாக பணத்தை தராவிட்டால் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விட்டதன் அடிப்படையிலும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையிலும் உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகள் தலையிட்டு முதலில் முஜீபுர் ரஹ்மான் கடும் ஊனமுற்ற மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி என்பதால் அவருக்கு முறைப்படி மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தின் மூலமாக கிடைக்க வேண்டிய உதவித்தொகை ரூபாய் 1500க்கு ஏற்பாடு செய்யப்பட்டு அடுத்த மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், அவருடைய வங்கிக்கணக்கில் உள்ள 7000 ரூபாய் பணத்தையும் இன்று (21.02.19) மாலைக்குள் அவரது குடும்பத்தாரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் TARATDAC யிடம் தெரிவித்துள்ளார்கள். (இதுவரை 1000 ரூபாய் மட்டுமே முஜீபுர் ரஹ்மான் உதவித்தொகை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது) இச்சம்பவத்தின் வாயிலாக தமிழக அரசுக்கு TARATDAC மூலம் தெரிவிக்கும் கோரிக்கைகள்:

உச்சநீதிமன்றம் சமூக நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயப்படுத்தக் கூடாது என பலமுறை உத்தரவிட்டும் எல்லா இடங்களிலும் ஆதாரை கட்டாயப்படுத்துவது இன்றுவரை தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதார் எடுக்க முடியாது என நன்றாக தெரிந்திருந்தும் ஆதார் கொண்டுவந்தால்தான் பணத்தை தருவேன் என வங்கி நிர்வாகம் கூறுவது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். எனவே, உடனடியாக அனைத்து வங்கிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதாரை கட்டாயப்படுத்தக்கூடாது என்கிற உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும்,

கடும் ஊனமுற்றோர், மனவளர்ச்சி குன்றியவர்கள், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு செய்து அதற்க்கான அரசானை வெளியிட்டு பல வருடங்கள் ஆன பிறகும் இவ்வகை ஊனமுற்றோரில் பலர் இன்னும் 1000 ரூபாய் உதவித்தொகை மட்டுமே பெற்றுவருகிறார்கள். எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1500 ரூபாய் உதவித்தொகை பெற தகுதியான அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான உதவித்தொகை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமாறும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழுவின் சார்பில் P.செல்வநாயகம் – மாவட்ட தலைவர் S.பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!