Home செய்திகள் மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறிவரும் இராமநாதபுரம் மாவட்டம் வாலந்தரவை ஊராட்சி கிராமங்கள்!..

மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறிவரும் இராமநாதபுரம் மாவட்டம் வாலந்தரவை ஊராட்சி கிராமங்கள்!..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை ஊராட்சி பகுதி மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறி வருகிறது என ராமநாதபுரம் மக்கள் நல்வாழ்வு இயக்க நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.ஜே.பிரவீன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது,       கெய்ல்   நிறுவனம் வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் கியஸ் பைப்லைன் அமைத்து அதன் மூலம் நிலத்திலிருந்து கியஸ் எடுத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மின்சாரம் தயாரிக்க விற்பனை செய்கிறது.

இந்த பைப் லைன்கள் ஆயுள் அதிகபட்சம்  20 வருடங்களே ஆனால் இங்குள்ள பைப்லைன்கள் போடப்பட்டு 20 வருங்களுக்கு மேலானதால் அவைகள் தோடர்ந்து சேதமடைந்து வருகின்றன. கடந்த 10ந்தேதி   மாலை வழுதூர் கெயில் நிறுவனத்தின் பின் பகுதியில் உள்ள பைப்லைன் உடைந்து அதிக இரைச்சலுடன் கியஸ் மற்றும் கழிவுகள் வெளியேறுகின்றன, தற்போதுவரை கசிவு ஏற்படுவதற்க்கான காரணம் மற்றும் அதனை தடுப்பதற்க்கான எந்த முகாந்திரமும் நடைபெறவில்லை.

தொடர்ந்து இதுபோன்று பைப்லைன்கள் உடைவதும்,  திடீரென மரங்கள் தீப்பிடித்து எரிதல், கடுமையான இரைச்சல்,  நில அதிர்வு ஆகியன ஏற்படுகின்றன. நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரிகள் பெயரளவில் விசாரிப்பதோடு சரி.

ONGC, GAIL போன்ற நிறுவனங்கள் கிராமங்களில் சிலரை மட்டும் சரிசெய்து அவர்களை தங்கள் கைப்பாவையாக வைத்துக்கொண்டு அவர்கள் மட்டும்தான் கிராமம் என்பது போல் பிம்பத்தை ஏற்படுத்தி அரசு அதிகாரிகள் மற்றும் அரசு இயந்திரங்களை ஏமாற்றி வருகின்றனர்.

ஏற்கனவே 20வருடங்களாக சிலரின் சுயலாபத்திற்க்காக ONGC, GAIL, RK PLANT மற்றும் EB ஆகியவை ஊருக்குள் நடத்த அனுமதி வழங்கிவிட்டனர், Industrial சட்டத்தின்படி மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து 15 Km அப்பால் தான் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கவேண்டும். ஆனால் எந்தவித சட்ட விதிகளை பின்பற்றாமல் அனுமதி வழங்கியுள்ளனர்.

மேலும் இந்த நிறுவனங்கள் அனுமதியின்றி 5,4,3,2 என்று ஆழ்துளைக் கிணறு அமைத்துள்ளனர்,ஆதலால் இந்தப்பகுதிகளில் கிணறுகளில் கூட தண்ணீர் இல்லாது தண்ணீர் பிரச்சனை தலையாய பிரச்சனையாக உருவாகியுள்ளது. இதுவரை ஊராட்சியில் CSR – Corporate Social Responsibility கீழ் எந்தவித திட்டங்களும் பெரிதாக செயல்படுத்தவில்லை, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கவில்லை, தொடர்ந்து இந்த நிறுவனங்களிலிருந்து வெளிவரும் இரைச்சல்களால் வீடுகளில் அதிர்வுகள் ஏற்படுகின்றது.

மேலும் ஊராட்சிகளில் தற்போது கேன்சர் நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. ஏற்கனவே நிலம் கையகப்படுத்திய நில உரிமையாளர்களுக்கு இன்னும் இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை ,இந்த நிலையில் மேலும் இடங்களை கையகப்படுத்த முனைகிறது கெயில் நிறுவனம்.

ஒரு சிலரின் சுயநலத்திற்க்காக ஒட்டுமொத்த ஊராட்சி கிராமங்களும் அழிவை நோக்கி!…

-இந்த நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்தது யார்?..

-அப்போது போட்ட ஒப்பந்தம் எங்கே?…

-இந்த நிறுவனங்கள் வருடந்தோறும் கட்டும் பஞ்சாயத்து வரி எவ்வளவு?…

-எத்தனை ஆழ்துளைக் கிணறுக்கு அனுமதி கொடுக்கபட்டது?..

-இதுவரை செய்த (CSR Corporate Social Responsibility)சமூக பொறுப்புடன் செய்தவை    என்ன?..

-இழப்பீடு வழங்கப்பட்ட பயனாளிகள் பட்டியல் எங்கே?..

-விபத்து ஏற்பட்டால் அதற்க்கான முதலுதவி உபகரணம் மற்றும் தீயணைப்பு வாகனம், மருத்துவ வாகனம், அவசர ஊர்தி ஆகியவை எங்கே?…

-எத்தனை வருடம் இந்த நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது,அதற்கான கால நிர்ணயம்? …

இப்படி பல கேள்விகளுடன் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் வாயிலாக கேள்வி கேட்டும் இன்றுவரை பயனில்லை?!..

ஜனவரி 26 நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட கேள்விகளை தீர்மானமாக நிறைவேற்றி, ஒரு மாதத்திற்க்குள் அனைத்து நிறுவனங்களும் பதிலாளிக்கவில்லை எனில் அவர்களுக்கு ஊராட்சி வருடாந்திர வரி இரசீது கொடுக்ககூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஆனால் அதற்க்கு பதிலும் இல்லை பலனுமில்லை?!…

இதே நிலை தொடர்ந்தால் விரைவில் ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களும் மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறிவிடும்!…

சில நாட்களுக்கு முன்பு திருப்புல்லாணி அருகில் இதுபோலவே ONGC பின்புறம் உள்ள கிராமங்களில் நில அதிர்வு மற்றும் நிலவிரிசல் ஏற்பட்டது தற்போதுவரை அதற்க்கான உண்மைதன்மையை வெளியிட மாவட்ட நிர்வாகம் தாயாராக இல்லை. ஆகவே வாலாந்தரவை ஊராட்சியில் உள்ள கிராமங்கள் மக்கள் வாழ தகுதியற்ற தாக மாறிவருகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சினை குறித்து ஆராய்ந்து கெய்ல் மற்றும் ஒ.என்.ஜி. சி நிறுவனங்களை அப்புறப்படுத்தி மக்களை காக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com