கீழக்கரை நூரானியா நர்ஸரி மற்றும் ப்ரைமரி ஸ்கூல் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா..

கீழக்கரை நூரானியா நர்ஸரி மற்றும் ப்ரைமரி ஸ்கூல் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நேற்று (26-0-2017) பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இவ்விழா அல்மதரஸத்துல் அக்ஸாவின் செயலாளர் சயீது தலைமையில் தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு தெற்கு ஜமாஅத் உதவித் தலைவர் பவுசுல் அலியுர் ரஹ்மான் மற்றும் புதுத்தெரு MYFA அமைப்பு செயலாளர் சாஹிதீன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். நிகழ்ச்சியின் வரவேற்புரை மற்றும் துவக்கவுரையை பள்ளி முதல்வர் ரெத்தினாபாய் மற்றும் லாஹிதுகான் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினாராக கீழ்க்கரை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் உமாமகேஸ்வரி கொடியேற்றி வைத்து விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். மேலும் மாநில மனநோய் நிபுனரான பெரியார் லெனின் அவர்களும் விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

இவ்விழாவில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியின் நன்றியுரையை முஹம்மது ஜுபைர் அவர்கள் வழங்கினார்கள்.