Home செய்திகள் நிலக்கோட்டை  பேரூராட்சி பழைய காய்கறி மார்க்கெட் வணிக வளாக கட்டிடம் பழுதடைந்ததால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம்

நிலக்கோட்டை  பேரூராட்சி பழைய காய்கறி மார்க்கெட் வணிக வளாக கட்டிடம் பழுதடைந்ததால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம்

by mohan

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சி 3வது வார்டு பகுதியில் 1924 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே பழைய காய்கறி மற்றும் ஆட்டுக்கறி மற்றும் பருத்தி வியாபாரம்  உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்யும் பேட்டையாக  பேரூராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டது.      கடந்து சுமார் நூறு ஆண்டுகளை ஒட்டியும் கட்டிடம் பழமை அடைந்ததால் தற்போது எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயகரமான சூழ்நிலையில் தற்போது கட்டிடம் உள்ளது. இந்தப் பழமையான கட்டிடத்தில் தற்போது  நகைக்கடை தொழிலாளர்கள் செய்யும் கடை, நகைக்கடைகள், ஆட்டுக்கறி வியாபாரம், பலசரக்கு கடைகள், பழக்கடைகள் ,பூக்கடைகள் உள்ளிட்ட கடைகள் தற்போது செயல்பட்டு வந்தாலும் மழைகாலங்களில் அதிகமாக  பல்வேறு நிலைகளில் வியாபாரிகள், பொதுமக்கள், பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.     இந்த வணிக வளாக கடைகள் நூறாண்டுகளுக்கு மேலாக ஒரு சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு செய்யப்பட்டு வருவதாகவும் அரசியல் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் தலையீடு இருப்பதாக பொதுமக்கள் கடுமையாக குற்றச்சாட்டை தெரிவிக்கின்றனர்.நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைச்சாமி நேரில் சென்று ஆய்வு செய்து கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் உத்தரவிட்டார்.    இதுகுறித்து நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைச்சாமி கூறியதாவது: நிலக்கோட்டை பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 100 வருடத்திற்கு உரிய கட்டிடம்  பழுதடைந்துள்ளது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து அடிப்படையில் இந்த கடைகளை ஆய்வு செய்தோம், கட்டிடங்கள் பழுதடைந்து இருப்பதாலும் ஆக்கிரமிப்புகள் இருப்பதாலும் மிக விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்ப ட்டு புதிய வணிக வளாக கட்டிடம் பேரூராட்சி சார்பாக கட்டப்படும் என தெரிவித்தார்.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!