Home செய்திகள் செம்பட்டியில் சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்ட இளைஞர் வாகனம் பறிமுதல். டி.ஐ.ஜி விசாரணை

செம்பட்டியில் சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்ட இளைஞர் வாகனம் பறிமுதல். டி.ஐ.ஜி விசாரணை

by mohan

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி போலீஸ் சரகம் பகுதியில், கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி, வாகனச் சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வெள்ளிக¢கிழமை காலை செம்பட்டியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி தலைமையில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நிலக்கோட்டை அருகே உள்ள என்.ஊத்துப்பட்டியைச் சேர்ந்த சிவமணி (31). இவர், சமூகப் பணியாற்றியதற்காக, மாவட்ட கலெக்டரிடம் விருதைப் பெற்றவர். இவர், உடல்நிலைப்பாதிக¢கப்பட்டு, கல்லடைப்பு காரணமாக கடந்த, 20 நாட்களுக்கு முன்பு ஆப்பரேஷன் செய்து உடல் பாதிப்பில் உள்ளார். இதற்காக மருந்து வாங்குவதற்காக நேற்று செம்பட்டி வழியாக, திண்டுக்கல் நோக்கி தனது, இருசக்கர வாகனத்தில் காலை 8 மணிக்கு செம்பட்டியை கடந்து, 10 மணிக்குள் வீடு திரும்ப வேண்டும் என்ற எண்ணத்தில் சென்றார். ஆனால் 8 மணிக்கு செம்பட்டி பஸ் நிலையம் அருகே இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி எந்தவிதமான விசாரணையும் இல்லாமல், உடல்நிலைப் பாதிக¢கப்பட்ட இளைஞர் சிவமணி பிடித்து அவரிடம், எந்தவிதமான விளக¢கமும் கேட்காமல் வாகனத்தை பறிமுதல் செய்தார். இவர், உடனடியாக தனக்குத் தெரிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தகவல் தெரிவித்தார். இதை அறிந்த உறவினர்கள் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி செல்போனுக்கு தொடர்பு கொண்டு சிறு நீரகம் பாதிப்பு ஏற்பட்ட இளைஞனின் வாகனத்தை பறிமுதல் செய்துள்ளீர்கள் என்று கேட்பதற்காக, போன் செய்தபோது, இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி போனையும் எடுக்கவில்லை. உடனடியாக திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி முத்துசாமி அவர்களிடம், சிவமணியின் உறவினர்கள் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை எடுத்து கூறி, வாகனத்தை விடுவிக¢கும்படி கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் உடனடியாக விசாரித்து சிவமணியின் வாகனம் விடுவிக்கப்பட்டது. இதுகுறித்து சிவமணி கூறியதாவது, நான் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக சமுதாயப் பணி ஆற்றி பல்வேறு நிலையில் சமூக வளர்ச்சிக்காக பாடுபட்டு உள்ளேன். இன்றைக்கு ஏற்பட்டுள்ளன கொரானா தொற்றுநோய் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எனக்கு நன்றாக தெரியும். சிறுநீரக நோயால் பாதிப்பை ஏற்பட்டு, பின்னர் அறுவை சிகிச்சை செய்துள்ளேன். இந்நிலையில் நான்,   மாத்திரை சாப்பிடவில்லை என்றால், இரண்டு மணி நேரம் எனக்கு சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதை கூட செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி விசாரிக்கவே இல்லை. என் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற குறிக்கோள் மட்டுமே அவரிடம் இருந்தது. இதனால் மனதாலும், உடலாலும் பல்வேறு இன்னலுக்கு ஆளானேன். மரியாதைக¢குறிய ஐயா டி.ஐ.ஜி முத்துசாமி அவர்களிடம் எனது உறவினர்கள் தொடர்பு கொண்டு, நடந்த சம்பவத்தை எடுத்து கூறிய பின்னரே எனது வாகனம் என்னிடம் ஒப்படைக¢கப்பட்டது. எனவே இதுபோன்ற நிலை ஏற்படாத வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், என் போன்ற நோயாளிகளுக்கு போலீசாரின் வாகன சோதனையில் இருந்து எங்களை விடுவிக¢க வழிவகை செய்ய வேண்டும். இதுபோன்ற மனித நேயமற்ற போலீஸ் அதிகாரிகளின் செயல் எங்களை மனவேதனையை ஏற்படுத்துகிறது என கண்ணீர் மல்க கூறினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com