நிலக்கோட்டை அருகே  18 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி துவக்கம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிலுக்குவார்பட்டி ஊராட்சி, மனைவ ராதி கிராமத்தில் மயான தார் சாலைக்கு செல்ல கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.   கோரிக்கையை ஏற்று தமிழக அரசின் சார்பில் பொது சேர்ம ஒப்படைப்பு நிதியிலிருந்து 18 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி அதற்கான பணியை நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் யாகப்பன் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி பொறியாளர் டெல்லி பாபு, அம்மையநாயக்கனூர் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் தண்டபாணி, நிலக்கோட்டை பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர்  சேகர், சிலுக்குவார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ஜெயசீலன், ஒன்றிய கவுன்சிலர் நாகராஜ், ஒப்பந்ததாரர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

உதவிக்கரம் நீட்டுங்கள்..