திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சிலுக்குவருபட்டி ஊராட்சியில் உள்ள சிவன் கோவில் மேடு சிவன் கோயிலுக்குச் செல்லும் சாலையை சிமெண்டு சாலையாக மாற்றி அமைக்கும் பணிக்காக நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 6 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கி பூமி பூஜை விழா நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ். தேன்மொழி சேகர் தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் யாகப்பன் முன்னிலை வகித்தார்.இவ்விழாவில் நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் லாரன்ஸ், , உதவிப் பொறியாளர்கள் வெற்றி வீரன், டெல்லி பாபு, முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மூர்த்தி, சிலுக்குவார்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் செல்வி ஜெயசீலன், நூத்துலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் , நிலக்கோட்டை பேரூராட்சி 6 வது வார்டு கிளை செயலாளர் பூக்கடை சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
You must be logged in to post a comment.