Home செய்திகள் நிலக்கோட்டையில் தற்காலிக பூமார்க்கெட் அமைக்கும் பணி தீவிரம். விவசாயிகள் வரவேற்பு

நிலக்கோட்டையில் தற்காலிக பூமார்க்கெட் அமைக்கும் பணி தீவிரம். விவசாயிகள் வரவேற்பு

by mohan

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் பெரிய பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பூ மார்க்கெட் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மத்திய அரசு மற்றும் மாநில அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் பூட்டப்பட்டுள்ளது. இப்படி போடப்பட்டதால் கடந்த இரண்டு மாதங்களாக இப்பகுதியில் விவசாயம் செய்து பூக்களை சாகுபடி செய்த விவசாயிகள் அனைவரும் பூக்களை செடியிலேயே சிலர் பூக்க விட்டனர் சிலர் பூக்களை பறித்து தெருக்களிலும் ஆங்காங்கே கொட்டி விட்டு சென்றனர்.கடந்த இரண்டு மாதங்களாகவே கடை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தது அடிப்படையில் தமிழக அரசு கடந்த சில தினங்களாக ஏற்படுத்தி இருந்தாலும் இன்னும் பூ மார்க்கெட் முழுமையாகத் இருக்க தயக்கம் உத்தரவிடவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மையே. சாயலில் வாழ்வாதாரமாக நிலக்கோட்டை பகுதியில் விளங்கும் பூக்கள் சாகுபடி மையமாக வைத்து நிலக்கோட்டை பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில் மேலக்கோட்டை வத்தலக்குண்டு ரோட்டில் உள்ள பிஎஸ்என்எல் டவர் அப்பகுதியில் காலியாக உள்ள அரசுக்கு சொந்தமான ஒரு இடத்தைத் தேர்வு செய்து அந்த இடத்தில் இன்று முதல் ( 27.05.2020 ) திறப்பதற்காக நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி தலைமையில் அதிகாரிகள் தற்காலிக கடைகளை உருவாக்கும் பணியை நேற்று தொடங்கினார்.இந்தப் பணியில் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், சுகாதார மேற்பார்வையாளர்கள் மஞ்சுளா, கல்யாணி , ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிலக்கோட்டை பகுதியில் தற்காலிக பூ மார்க்கெட் தொடங்கும் தகவலறிந்த இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த வரவேற்பு அளித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!