தொடரும் நிலவேம்பு கசாயம் வினியோகம்..

கீழக்கரையில் கடந்த சில மாதங்களாகவே டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக உள்ளது.  அதனால் சிறுவர் முதல் முதியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக கீழக்கரை நகராட்சி சுகாதாரத்துறை மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளும் நகர் முழுவதும் நிலவேம்பு கசாயம் வழங்கி வருகிறார்கள்.

இதன் தொடர்பாக மக்கள் நல பாதுகாப்புக் கழகம், கீழக்கரை சட்ட போராளிகள் குழுமம், கீழக்கரை மக்கள் களம் மற்றும் பல சமூக நல அமைப்புகள் இணைந்து நிலவேம்பு கசாயம் வழங்கும் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறார்கள் நேற்று தில்லயேந்தல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 500 பிளாட் ஹூசைன் ஹாஜியார் பள்ளி பகுதிகளில் வழங்கப்பட்டது.

இன்று கீழக்கரை 4 மற்றும் 5 வது வார்டு பகுதியான கிழக்கு தெரு அப்பா பள்ளி, குளங்களை பள்ளி, பாத்திமா காலனி மற்றும் பருத்திக்கார தெருக்களில் வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.