நிலக்கோட்டை வட்டாட்சியர் தலைமையில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம்!

நிலக்கோட்டை வட்டாட்சியர் தலைமையில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம்!

தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் அரசு ஆகஸ்ட் மாத ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.இதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பேரூராட்சி, நகராட்சிகளில் சிறிய கோவில்கள், மசூதிகள், தேவாலங்களை திறக்க அனுமதி அளித்தும் பிற மாவட்டங்களில் ஆண்டு வருமானம் ரூ.10,000க்கு குறைவான வருமானம் கொண்ட கோவில், தேவாலயம், மசூதிகளை திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

ஆகையால் நிலக்கோட்டை மற்றும் வத்தலக்குண்டு சுற்று வட்டாரங்களில் உள்ள கோவில்கள், மசூதிகள், சர்ச் ஆகிய வழிப்பாட்டுத்தளங்களின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் யூஜின் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் வட்டாட்சியர் யூஜின் பேசியதாவது, அரசு அறிவித்தது போல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் 5 நபர்களுக்கு மேல் கூட கூடாது வழிப்பாட்டுத்தளங்களில் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியும் மற்றும் பல்வேறு அறிவுரைகளையும் ஆலோசனைகளாக வழங்கினார்.