நிலக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்க கூட்டம், ஓய்வூதியர் சங்க மீட்டிங் ஹாலில் நடைபெற்றது..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஓய்வூதியர் சங்க மீட்டிங் ஹாலில் நடந்த இந்த கூட்டம் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் எம். இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தின் முக்கிய அம்சமாக “வட்டார வழக்கறிஞர் சங்கம்” என இருந்த பெயருக்கு பதிலாக”வழக்கறிஞர்கள் சங்கம் நிலக்கோட்டை” என பெயர் மாற்றம் செய்து ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டது.
மேலும் பல்வேறு முக்கிய அம்சங்களை பற்றி விவாதித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு நிலக்கோட்டை பெண் வழக்கறிஞர்களுக்கு புதிய கட்டிடம் ஒதுக்கி தர வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னர் அனைத்து வழக்கறிஞர்களும் ஒன்று சேர்ந்து நிலக்கோட்டை வட்டாட்சியர் அவர்களை சந்தித்து புதிய கட்டிடம் தேவை சம்பந்தமாக பேசி மனு அளித்தனர்.
இக்கூட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் பி.சங்கர், செயலாளர்,சி.வி.கே.கோகுல்நாத், இணைச் செயலாளர் ராஜா, பொருளாளர் வேந்தன்.
சங்கத்தின் கௌரவ தலைவர், எம்.கருப்பையா.
ஆலோசகர்கள்;
ஆர்.தங்கராஜ், எம்.கே.ராணி.ஐ.கணேசன்,மாதவராஜன், சிவபிரகாஷ், மணிகண்டன், அம்மையப்பன்,சண்முகாதேவி,சந்திரன், கோபிநாத்.
நிர்வாக குழு உறுப்பினர்கள்;
ஆர்.கோபாலகிருஷ்ணன், செல்லப்பாண்டி, மணி முருகன், பிரேம்குமார், கார்த்திகேயன், ஞானவல்லி, ராஜசேகர், மாரிமுத்து, பால்பாண்டி, சௌந்தரநாயகி, தமிழ்செல்வி, கீதா, சத்தியபிரியா, செல்வநாதன், புரட்சிமணி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.