Home செய்திகள் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) தலைமை இயக்குநராக, மகாராஷ்டிரா மாநில தீவிரவாத எதிர்ப்புப் படையின் (ஏடிஎஸ்) தலைவர் சதானந்த் வசந்த் நியமனம்..

தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) தலைமை இயக்குநராக, மகாராஷ்டிரா மாநில தீவிரவாத எதிர்ப்புப் படையின் (ஏடிஎஸ்) தலைவர் சதானந்த் வசந்த் நியமனம்..

by Askar

தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி சதானந்த் வசந்த டேட்டையும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்டிஆர்எஃப்) அமைப்பின் இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி பியூஷ் ஆனந்தையும் மத்திய உள்துறை அமைச்சு நியமித்துள்ளது.

உள்துறை அமைச்சின் முன்மொழிவுக்கு அமைச்சரவை நியமனக்குழு அளித்த ஒப்புதலின் பேரில் இந்த நியமனங்கள் குறித்த அறிவிப்பு புதன்கிழமை வெளியானது.

தற்போதைய தேசிய பேரிடர் மீட்புப் படையின் இயக்குநர் (NDRF) அதுல் கர்வால் மார்ச் 31 அன்று ஓய்வு பெறவிருக்கிறார். அதையடுத்து ஐபிஎஸ் அதிகாரி பியூஷ் ஆனந்த் அந்த அமைப்பின் இயக்குநராகிறார்.

காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் இயக்குநராகப் பணியாற்றி வரும் பாலாஜி ஸ்ரீவஸ்தா மார்ச் இறுதியில் ஓய்வுபெறுகிறார். அதையடுத்து ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் குமார் அந்த அமைப்பின் தலைமையேற்க உள்ளார்.

தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) தலைமை இயக்குநராக மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சதானந்த் வசந்த் டேட் நியமிக்கப்பட்டுள்ளார். சதானந்த் வசந்த் டேட் 26/11 தாக்குதலின்போது பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடியதற்காக குடியரசுத் தலைவரின் காவல்துறை பதக்கம் பெற்றவர். இவர் வணிகவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற அவர், புனே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள என்ஐஏ இயக்குநர் சதானந்த் வசந்த டேட்டும், பிபிஆர்டி தலைவர் ராஜீவ் குமாரும் ஒரே காலகட்டத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளாக தேர்வாகி, பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!