Home செய்திகள் மோடி 3.0: மத்திய அமைச்சர்களாக மீண்டும் “அதே” இலாக்காக்கள் ஒதுக்கீடு!- முழுப் பட்டியல் இதோ..

மோடி 3.0: மத்திய அமைச்சர்களாக மீண்டும் “அதே” இலாக்காக்கள் ஒதுக்கீடு!- முழுப் பட்டியல் இதோ..

by Askar

இன்று மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்றது. இதில் பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டது. யார் யாருக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன? விரிவாகப் பார்க்கலாம்.

1. ராஜ்நாத் சிங் – பாதுகாப்புத்துறை அமைச்சர்

2. அமித்ஷா – உள்துறை அமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர்

3. நிதின் கட்கரி – சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்

4. ஜே.பி.நட்டா – சுகாதாரம் மற்றும் குடும்பநலன், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர்

5. சிவராஜ் சிங் செளகான் – வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்

6. நிர்மலா சீதாராமன் – நிதித்துறை மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர்

7. ஜெய்சங்கர் – வெளியுறவுத்துறை அமைச்சர்

8. மனோகர்லால் கட்டார் – மின்சாரத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர்

9. குமாரசாமி – எஃகு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சர்

10. பியூஷ் கோயல் – வர்த்தகத் துறை அமைச்சர்

11. தர்மேந்திர பிரதான் – கல்வித்துறை அமைச்சர்

12. ஜிதன்ராம் மாஞ்சி – குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம்

13. ராஜீவ் ரஞ்சன் என்ற லாலன் சிங் – பஞ்சாயத்துராஜ், மீன், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர்

14. சர்பானந்த சோனாவால் – துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர்

15. வீரேந்திர குமார் – சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

16. ராம்மோகன் நாயுடு – விமான போக்குவரத்துத் துறை அமைச்சர்

17. பிரகலாத் ஜோஷி – நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொதுவினியோகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர்

18. ஜூவல் ஓரம் – பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர்

19. கிரிராஜ் சிங் – ஜவுளித்துறை அமைச்சர்

20. அஸ்வினி வைஷ்ணவ் – ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்

21. ஜோதிர் ஆதித்ய சிந்தியா – தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர்

22. பூபேந்திர யாதவ் – சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர்

23. கஜேந்திரசிங் ஷெகாவத் – கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்

24. அன்னபூர்ணா தேவி – பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர்

25. கிரண் ரிஜிஜூ – நாடாளுமன்ற விவகாரத்துறை, சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர்

26. ஹர்தீப்சிங் பூரி – எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை அமைச்சர்

27. மன்சுக் மாண்டவியா – தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்

28. ஜி.கிஷன் ரெட்டி – நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர்

29. சிராக் பாஸ்வான் – உணவு பதப்படுத்தும் தொழித்துறை அமைச்சர்

30. சி.ஆர்.பாட்டீல் – ஜல்சக்தி அமைச்சர்

1. ராவ் இந்திரஜித் சிங் – புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், திட்ட அமைச்சகம், கலாச்சாரத்துறை இணை அமைச்சர்

2. ஜிதேந்திர சிங் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம், அனுசக்தி, விண்வெளித் துறை இணை அமைச்சர்

3. அர்ஜுன்ராம் மேக்வால் – சட்டம் மற்றும் நீதித்துறை, நாடாளுமன்ற விவகாரம் இணை அமைச்சர்

4. பிரதாப் ராவ் ஜாதவ் – ஆயுஷ் அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்பநலன் இணை அமைச்சர்

5. ஜெயந்த் சவுத்ரி – திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர், கல்வித்துறை இணை அமைச்சர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com