முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் நடத்தப்படும் இலக்கிய கூட்டங்கள் வரிசையில் கலைஞரின் பெரும் புகழுக்கு காரணம் அவரது பேச்சாற்றலா? எழுத்தாற்றலா? எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி நிகழ்விற்கு தலைமை தாங்கினார். கலை பதிப்பகத்தின் ஆசிரியர் கவிஞர் பாப்பாக்குடி இரா. செல்வமணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கலைஞரின் பெரும் புகழுக்கு காரணம் அவரது பேச்சாற்றலா? எழுத்தாற்றலா? எனும் தலைப்பில் நடந்த சிறப்பு பட்டிமன்றத்தின் நடுவராக முனைவர் கோ.கணபதி சுப்பிரமணியன் பங்கேற்றார். தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய இணைச் செயலாளர் புத்தநேரி செல்லப்பா தொடக்க உரையாற்றினார். பேச்சாற்றலே எனும் தலைப்பில் தூத்துக்குடி கூட்டுறவு வங்கி மேனாள் பொது மேலாளர் லட்சுமணன், சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பேராசிரியை அனுசுயா, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தைச் சேர்ந்த பேராசிரியை மகாலட்சுமி ஆகியோரும், எழுத்தாற்றலே எனும் தலைப்பில் முக்கூடல் வருவாய் ஆய்வாளர் கோமதி கிருஷ்ணமூர்த்தி, தேசிய வாசிப்பு இயக்க தலைவர் தம்பான், மனவளக்கலை மன்ற பேராசிரியை வேதிகா ஆகியோரும் வாதாடினர்.
பேச்சாற்றல், எழுத்தாற்றல் இரண்டுமே கலைஞருக்கு பெரும் புகழ் சேர்ப்பதாக இருந்தாலும் காலங்கள் கடந்தும் படிக்க வாய்ப்பு இருக்கின்ற அவரது எழுத்தாற்றலே மிகச் சிறந்தது என நடுவர் கணபதி சுப்பிரமணியன் தீர்ப்பளித்தார். கவிஞர் முத்துசாமி நன்றி கூறினார். புன்னைச்செழியன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆவுடையப்ப குருக்கள், மாணிக்கவாசகம், இருளப்பன் கோபாலகிருஷ்ணன், சுத்தமல்லி லட்சுமணன், மூக்குப்பேரி தேவதாசன், மேகலிங்கம், பாலசுப்பிரமணியன், கோதை மாறன், சந்திரபாபு, ரவிச்சந்திரன், திருக்குறள் முருகன், வனிதா, இனியாஸ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவருக்கு கலைஞர் குறித்த கட்டுரை நூல் பரிசாக வழங்கப்பட்டது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.