நெல்லைமாவட்டம் வீரசிகாமணி ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம்…

நெல்லை மாவட்டம் வீரசிகாமணி ஊராட்சியில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் இன்று காலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள்,என பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

இக்கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடைசெய்வது, பொதுசுகாதாரம் மற்றும் பாதுகாப்பான குடிநீர்,  ஊராட்சியால் நிறைவேற்றப்படும் வளர்ச்சிப்பணிகள்,  அரசின் இதர திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கிராமசபை கூட்டத்தை ஊராட்சி செயலர் லட்சுமணன் நெறிப்படுத்தினார். இக்கிராமசபைக்கூட்டம் தெற்கு பிள்ளையார் கோவிலில் நடைபெறும் என முன்னர் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. பின்னர் மழையின் காரணமாக ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தகவல்:- அபுபக்கர் சித்திக்,  வீரசிகாமணி, நெல்லை மாவட்டம் தொகுப்பு:- அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ்