Home செய்திகள்உலக செய்திகள் நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு

by Abubakker Sithik

திருநெல்வேலி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர். கா.ப. கார்த்திகேயன் வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 22.01.2024 அன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர். கா.ப. கார்த்திகேயன் வெளியிட திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், இதனைப் பெற்றுக் கொண்டார்.

01-01-2024-ஐ தகுதி நாளாகக் கொண்டு திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் தொடர்பாக சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணிகள் 27-10-2023 முதல் 09-12-2023 வரை நடைபெற்றது. இறுதி வாக்காளர் பட்டியலில் சட்டமன்ற தொகுதி வாரியாக இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் விபரங்கள் பின்வருமாறு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,46,684, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 1,54,139. மூன்றாம் பாலினத்தவர்கள் 62. மொத்தம் 3,00,885. அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 1,22,236, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 1,30,472, மூன்றாம் பாலினத்தவர்கள் எண்ணிக்கை 10. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,52,718.

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 1,33,758. பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 1,39,231. மூன்றாம் பாலினத்தவர்கள் எண்ணிக்கை 27. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,73,016. நாங்குனேரி சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 1,42,602. பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 1,48,435. மூன்றாம் பாலினத்தவர்கள் எண்ணிக்கை 13. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,91,050.

இராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 1,30,531. பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 1,34,601. மூன்றாம் பாலினத்தவர்கள் எண்ணிக்கை 17. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,65,149. அனைத்து தொகுதியிலும் உள்ள மொத்த ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 6,75,811, பெண் வாக்காளர்கள் 7,06,878, மூன்றாம் பாலினத்தவர்கள் 129. மொத்தம் 13,82,818.

மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்குவது தொடர்பாக பிறப்பு இறப்பு பதிவுகள் தொடர்பான இணையதளத்திலிருந்து இறந்த வாக்காளர்களின் விபரங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் களவிசாரணை மேற்கொள்ளப்பட்டு 3,686 இறந்த வாக்காளர்களின் விபரங்கள் இறப்பு சான்று மூலம் உறுதி செய்யப்பட்டு படிவம் 7 சேகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தில் பொது அறிவிப்பு செய்யப்பட்டு ஆட்சேபனை காலம் முடிவடைந்த பின்னர் வாக்காளர் பட்டியலில் இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டது.

மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படிவாக்காளர் பட்டியலில் ஒரே வாக்காளரின் புகைப்படங்கள் மற்றும் ஒத்த உள்ளீடுகள் இடம் பெற்றிருந்தததை நீக்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு அறிவிப்பு படிவம் A அனுப்பப்பட்டு மேற்படி அறிவிப்பு காலத்தில் (15 நாட்கள்) வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் களவிசாரணை மேற்கொள்ளப்பட்டு விசாரணை அறிக்கையில் 6,231 வாக்காளர்களின் விபரங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஒத்த உள்ளீடுகள் இருப்பதை உறுதி செய்யப்பட்டு படிவம் 7 அளித்து ஆட்சேபனைகாலம் முடிவடைந்த பின்னர் தகுதியற்ற வாக்காளர்களை வாக்காளர் பட்டியலிருந்து நீக்கம் செய்யவும் வாக்காளர் புகைப்படம் மாற்றம் மற்றும் பெயர் திருத்தம் உள்ளதாக கண்டறியப்பட்ட இனங்களில் படிவம் 8 அளித்து வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள 18-19 வயதுடைய இளம் வாக்காளர்களுக்கான வண்ண புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை தேசிய வாக்காளர் தினமான 25.01.2024 அன்று முதல் பதிவஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தவறியவர்கள் 2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பாணை வரப்பெற்று வேட்பு மனுதாக்கல் நிறைவு பெறுவதற்கு ஒருவார காலத்திற்கு முன்பு வரை www.voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter helpline என்கிற மொபைல் செயலி மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்திட விண்ணப்பங்கள் அளிக்கலாம். மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1950-னை தொடர்பு கொண்டு தங்களது சந்தேகம், கோரிக்கை தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மகேஸ்வரன் திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் ஷேக் அயூப் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!