கரிவலம்வந்தநல்லூரில் 70 கிராம நாட்டாமைகளுக்கு CCTV கேமிரா அமைப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், நடைபெற்ற குற்றச்செயல்களில் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணவும் காவல் துறையினருக்கு பெரிதும் உதவியாக இருக்கும் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கரிவலம்வந்தநல்லூர் காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 70 கிராமங்களைச் சேர்ந்த 124 நாட்டாமைகளை அழைத்து அவர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர்களிடம் கண்காணிப்பு கேமரா அமைப்பதன் முக்கியத்துவம் குறித்தும், அதன் நன்மைகள் குறித்தும் கூறி அனைவரும் தங்களின் கிராமத்தின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த முன்வரவேண்டும் எனவும்,மேலும் விரைவாக எந்த கிராமத்தில் கண்காணிப்பு கேமிரா அமைக்கப்படுகிறதோ அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து நாட்டாமைகளும் விரைவில் தங்களது கிராமங்களில் அதிக இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதாக உறுதியளித்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக கலந்து கொண்ட அனைவருக்கும் காவல் துறையினரின் சார்பாக இரவு உணவு வழங்கப்பட்டது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.