Home செய்திகள் பாகுபாடின்றி பயிர் காப்பீடு வழங்கக்கோரி திருவாருர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை- ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பு

காவிரி டெல்டாவில் கடந்த ஆண்டு கஜாபுயல் தாக்குதலால் 1 கோடிக்கு மேல் தென்னை மரங்கள் அடியோடு அழிந்தது. சுமார் 10 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி நெல் பயிர்கள் 80%மகசூல் இழப்பு ஏற்பட்டது.இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது பி.ஆர் பாண்டியன் கூறியதாவது:தென்னைக்கு மட்டும் நிவாரணம் வழங்கிய நிலையில் நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டிற்கான இழப்பீடு அனைவருக்கும் பெற்று தர தமிழக அரசு உத்திரவாதமளித்தது.

தற்போது காப்பீட்டு நிறுவனம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 564 வருவாய் கிராமங்களில் 164 கிராமங்களுக்கு மட்டும் இழப்பீடு மறுக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.அனைத்து கிராமங்களுக்கும் பாகுபாடின்றி இழப்பீடு வழங்க வலியுறுத்தி  ( 10.10.2019) திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலவலகத்தை தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளனர்.

மேலும் சுமார் 400 வாருவாய் கிராமங்களுக்கு வரப் பெற்றுள்ள இழப்பீடு தொகையை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் ஒப்புதலின்றி பழைய கடனில் வரவு வைக்க நடவடிக்கை எடுத்து வருவது கண்டிக்கதக்கது.நிபந்தனையின்றி அனைவருக்கும் உடன் வழங்கிட வலியுறுத்துகிறேன்.கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படாமல் காலம் கடத்தி வருவதால் சாகுபடி பணிகள் முடங்கி உள்ளது.தஞ்சாவூர் அரசு இராஜா மிராசுதார் குழைந்தைகள் மருத்துவமனையில் 2018 -19 ம் ஆண்டில் மட்டும் 995 குழைந்தைகள் இறந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்து பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்றார்.

அப்போது திருவாரூர் மாவட்ட செயலாளர் சேரன்.செந்தில்குமார், கவுரவ தலைவர் எம். செல்வராஜ், திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் சிவமுத்துராமன், ஒன்றிய செயலாளர், வி.பி.பாலமுருகன், என்.மணிமாறன்,(செய்தி தொடர்பாளர்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்தியாளர்   அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!