
மகாகவி பாரதியின் நினைவு நூற்றாண்டு நிகழ்ச்சியாக பொதிகைத் தமிழ்ச் சங்கம் நெல்லை அரசு அருங்காட்சியத்தோடு இணைந்து கடந்த மே மாதம் முதல் வாரந்தோறும் உரையரங்கம் என்ற நிகழ்ச்சியை “இளைய தலைமுறையினர் பார்வையில் மகாகவி பாரதி ” என்ற தலைப்பில் நடத்தி வருகிறது. இந்நிகழ்வில் மகாகவி பாரதியின் கவிதைகள்,கட்டுரைகள்,சிறுகதைகள் குறித்து பிரபல பேச்சாளர் ஒருவரும்,இளம் பேச்சாளர் ஒருவரும் உரையாற்றி வருகிறார்கள்.இணைய வழியில் நடக்கும் இந்நிகழ்ச்சியின் பத்தாவது வார நிகழ்ச்சி புதன் கிழமை மாலை 5.00 மணிக்கு நடந்தது. பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழ்ச் செம்மல் கவிஞர் பேரா தலைமையுரை வழங்கினார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் பா.வேலம்மாள் நோக்கவுரை வழங்கினார். நிகழ்ச்சியின் தொடக்க உரையாளராக சேலம் அரசு கல்லூரியின் முதுகலைத் தமிழ் முதலாம் ஆண்டு மாணவி ப.இலக்கியா பேசினார். தொடர்ந்து சென்னை,எழுத்தாளர்,ஓய்வு பேராசிரியர் வெ.இன்சுவை சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில்,”பாரதி ஒரு கவிஞன் மட்டுமல்ல;எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிகை ஆசிரியர், மொழிப் பற்றாளர், நாட்டுப் பற்றாளர், விடுதலை வீரர், சமூகப் போராளி என பன்முகம் கொண்டவர். இதனை இன்றைய இளைஞர்கள் அவசியம் தெர்ந்துகொள்ள வேண்டும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் பாரதியை குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். மதிப்பெண்கள் எடுக்க மட்டுமின்றி சுயமாக சிந்திக்கவும்,சக மனிதர்களை நேசிக்கவும்,அவர்களை அவதானித்துக் கொள்ளவும்,சிறிய கூட்டிலிருந்து சிறகு முளைத்து வான் நோக்கி மாணவர்களை பறக்க வைக்க வேண்டும் ஆசிரியர்கள். ஆசிரியர்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மாணவர்களுக்கு வேதம்.மாணவர்களை பாரதியின் கைப் பிடித்து செல்ல வைக்க வேண்டும். இன்றைய இளைஞர்களும், மாணவர்களும் நன்றாகவே எழுதுகிறார்கள். அவர்கள்பாரதியைப் படிப்பதன் மூலம் தமிழைப் படித்துக்கொள்ள முடியும். எனவேஎல்லா பள்ளிகளிலும் தமிழ் மன்றம் அமைக்கவேண்டும். “எனக் குறிப்பிட்டார். இதன் நிறைவாக அரசு அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் எழுத்தாளர் பவித்ரா நந்தகுமார், நா.நீலகண்டபிள்ளை, வழக்கறிஞர் இளம் வழுதி,கோவை முனைவர் அறச்செல்வி, மயிலாடுதுறை ஏ.வி.சி.கல்லூரி உதவிப் பேராசிரியர் ஆர். சாந்தி,திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ஹரிசுவேதா,பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி மாணவர் சூர்யா,கவிஞர் வெ.செல்லையா,வெற்றிச்செல்வி,சம்பத் குமார்,ஆரூர் தமிழன்,எம். பிரீத்தி,சிவக்குமார் சித்ரா,முனைவர் ஞானவதி,ஆசிரியர் ஸ்ரீராம்,இன்னிசை ரஞ்சித்,கிருபாநிதி, பி.காயத்ரி,முத்துலட்சுமி,ஸ்ரீபிரியா,பிச்சைகனி,சோமசுந்தரம் உட்பட்ட பாரதி அன்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.