
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் கண்தான விழிப்புணர்வு குழு மற்றும் சென்ட்ரல் அரிமா சங்கம் இணைந்து, திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை உதவியுடன் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. கண்தான விழிப்புணர்வுக்குழு செயலாளர் அரிமா SK.முருகன் தலைமை வகித்தார். அரிமா R.கலைச்செல்வன், துணைத்தலைவர் அரிமா C.முருகன், துணைச்செயலாளர் அரிமா A.முருகேஷ் முன்னிலை வகித்தார். அரிமா சுடர் பரமசிவம் வரவேற்றார். கண்தான விழிப்புணர்வுக்குழு நிறுவனரும், கண் தான மாவட்ட தலைவருமான அரிமா KRP இளங்கோ தொகுப்புரை ஆற்றினார். சுடலை பூபதி முகாமை தொடங்கி வைத்தார்.
அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் சிவரஞ்சனி, ஆண்டியா ஆகியோர் பரிசோதனை செய்தனர். முகாமில் 173 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 51 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், SKTB யோகா மருத்துவமனை மருத்துவர் கோபி, நேரு பாரா மெடிக்கல் செவிலியர்கள் செய்திருந்தனர். முடிவில் MRK ஆட்டோ ஓட்டுனர் செல்வம் நன்றி கூறினார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.