Home செய்திகள் நெல்லை சாலைகளை சீரமைக்க கோரி தர்ணா போராட்டம்…

நெல்லை சாலைகளை சீரமைக்க கோரி தர்ணா போராட்டம்…

by mohan

நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முக்கிய சாலைகளை குடிநீர் குழாய் பதிப்பபதற்க்காக தோண்டி அதனை அப்படியே போட்டு விட்டதால் குண்டும் குழியுமாக காணப்படுவதோடு தினம் தினம் விபத்துக்களும் நடப்பது வாடிக்கையாகி விட்டது.இந்த சாலைகளை சரி செய்யக்கோரி DYFI சார்பில் நெல்லை வாகையடி முக்கில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் K S ரசூல் மைதின் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். தனது கண்டன உரையில்,” ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பது அதிகாரிகள் சம்பாதிப்பதற்க்கே இந்த திட்டம் ஆகும். இதனை முறைப்படுத்த IAS அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றார். கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட தலைவர் G.பாஸ்கரன் தலைமை உரையாற்றினார். DYFI முன்னாள் தலைவர் தோழர் ராஷேஸ் முன்னிலை வகித்தார். மமக மாவட்ட செயலாளர் டவுண் ஜமால்,தமுமுக மாவட்ட துணை செயலாளர் கம்புகடை ரசூல்,மமக துணை செயலாளர் அ.காஜா,ஊடக அணி செய்யது டவுண் நகர தலைவர் கோல்டன் காஜா,மேலப்பாளையம் பகுதி தலைவர் தேயிலை மைதின், பொருளாளர் நசீர்,43 வது வார்டு தலைவர் காதர் மைதின்,துணை தலைவர் முகைதின் ஜலால், பாபு கான்,புரோஸ் கான்,முகம்மது தாசீன்,41 வார்டு சித்தீக் கரிக்காதோப்பு செயலாளர் சதாம்,தலைவர் சதாம் ஹூசைன்,ஜெய்லானி,யாசர்,காதர் ஷா,அன்சாரி,ரபீக் கட்டு சேக்,தௌபீக்,தாவூது உள்ளிட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் மற்றும் தோழமை கட்சியினரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com