நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், ஆன்-லைன் வகுப்புகளை முறைப்படுத்த கோரியும்,சுரண்டை நகர திமுக மாணவர் அணி மற்றும் இளைஞர் அணி சார்பில் மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து சுரண்டை கலைஞர் அறிவாலயம் முன்பு சமூக இடைவெளியுடன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். சுரண்டை பேரூர் முன்னாள் துணைத் தலைவர் ராமர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாணவரணி குமார், இளைஞரணி அரவிந்த் சிதம்பரம், மாடசாமி, கோமதிநாயகம்,எழில், மாணவரணி நவீன்குமார்,தகவல் தொழில் நுட்ப அணி கார்த்திக், 16-வது வார்டு பிரதிநிதி பவுன்ராஜ், 2 வது வட்ட பிரதிநிதி பாபு மற்றும் நகர மாணவரணி மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், ஆன்லைன் வகுப்புகள் முறைப்படுத்த கோரியும், அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் கோஷமிட்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உதவிக்கரம் நீட்டுங்கள்..