Home செய்திகள் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் ஆன்லைன் மூலம் மட்டுமே அட்மிஷன்-மாணவ மாணவிகள் நேரில் வர தேவையில்லை என கல்லூரி முதல்வர் அறிவிப்பு…

சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் ஆன்லைன் மூலம் மட்டுமே அட்மிஷன்-மாணவ மாணவிகள் நேரில் வர தேவையில்லை என கல்லூரி முதல்வர் அறிவிப்பு…

by mohan

தென்காசி மாவட்டம் சுரண்டையில் காமராஜர் அரசு கலைக்கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் பிளஸ் 2 தேர்ச்சி அடைந்த மாணவ மாணவியர்களுக்கு 2020 21 ஆம் ஆண்டிற்கான கலை அறிவியல் இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலமாக 20-07-2020 முதல் நடைபெறுகிறது.விண்ணப்பதாரர்கள் இன்டர்நெட் வசதியுள்ள தங்களது கைபேசி மற்றும் தங்கள் பகுதிகளில் உள்ள பாதுகாக்கப்பட்ட பொது சேவை மையங்களை அணுகி தங்களது விவரங்களை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள www.tndceonline.org என்ற இணையதள வாயிலாக சென்று கேட்கப்படும் விவரங்களை உட்செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும், விண்ணப்ப கட்டணம் ரூபாய் 48. பதிவு கட்டணம் ரூபாய் 2., எஸ்சி.எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை, பதிவு கட்டணம் மட்டும் கட்டினால் போதுமானது. இணையதளம் வாயிலாக பதிவு செய்ய இறுதி நாள் 31-07-2020 ஆகும். பதிவு செய்தவர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய துவங்கும் நாள் 25-07-2020. சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இறுதிநாள் 5-8-2020 ஆகும்.கண்டிப்பாக விண்ணப்பங்கள் நேரடியாக வழங்கப்படமாட்டாது. எனவே கல்லூரிக்கு யாரும் நேரில் வர தேவையில்லை. இவ்வாறு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரா.ஜெயா கூறியுள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!