
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பஸ்நிலையத்தில் யாதவ சமுதாய இளைஞர்கள் சார்பில் வீரன் அழகுமுத்துக்கோன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இதில் அழகு முத்துக்கோன் வாரிசு விஷ்னு, சங்கை குரு வசந்த், அதிமுக நகர செயலாளர் முருகன், முன்னாள் நகர செயலாளர் கிட்டு ராஜா, மற்றும் கூட்டுறவு சங்க இயக்குனர் மாரியப்பன்,மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் மைதீன், எம்ஜிஆர் இளைஞர் அணி நகர செயலாளர் ராஜேந்திரபிரசாத் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக மன்றத்தின் மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட தலைவர் செல்லத்துரை, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சிவா, காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகர தலைவர் சமுத்திரம், மாவட்ட பொதுச் செயலாளர் முருகேசன், இஸ்மாயில், ரவி, மாடசாமி ரமேஷ் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் நகர செயலாளர் சங்கர் ஆகியோர் அழகுமுத்துக்கோன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
இதற்கான ஏற்பாடுகளை நகர யாதவர் சமுதாய இளைஞர் அணி தலைவர் செந்தூரப்பாண்டிசேர்வை, உறுப்பினர்கள் சிவா ,ரவி செல்வம், முருகன் கிருஷ்ணன் , தினேஷ்குமார், அரவிந்தன், சிவா, செல்வம் பாலாஜி, இளங்கோவன் குட்டையான், ரவி, கிஷோர் சிவபெருமாள் மற்றும் யாதவ சமுதாய நாட்டாமை, அசோக் மதி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இவ்விழாவில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளி விட்டு முக கவசம் அணிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.