
உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகளும் தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.அதிலும் வெளிமாவட்டம், வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தும் மையத்திற்கு அழைத்து சென்று அவர்களுக்கான, உணவு, தங்குமிட வசதிகளை செய்து கொடுத்து கொரோனா மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பின்னர் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லையென்றால் சந்தோசமாக வீட்டிற்கும், தொற்று இருப்பின் சிகிச்சைக்காகவும் அனுப்பி வைக்கின்றனர். இடைப்பட்ட காலகட்டத்தில் அவர்களை நேரில் சந்திப்பது ஆய்வு செய்வது என பணிபுரிகின்றனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வி.கே.புதூர் தாசில்தார் மற்றும் தென்காசி தாசில்தார்,வி.ஏ.ஓ என கொரோனா தொற்றால் பல வருவாய்த் துறையினரும், எஸ்ஐ, ஏட்டு, போலீஸ் என காவல்துறையினரும் செவிலியர்கள் என மருத்துவ துறையினரும் சில ஊராட்சி துறையினரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் தனிமைப்படுத்தும் மையத்திற்கு உணவு மற்றும் அவர்களது தேவை பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபடும் வருவாய்த்துறை அலுவலர்கள் என யாருக்கும் 3 லேயர் அல்லது 95 முககவசம் மற்றும் கை உறை, போதிய அளவில் சானிடைசர், உள்ளே ஆய்வு மேற்க் கொள்பவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் போன்ற அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் இதுவரை சரிவர வழங்கப்படவில்லை என தெரிகிறது. அத்துடன் இவர்களுக்கு விடுமுறை கூட அளிக்காமல் தொடர் பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் தெரிகிறது. இதனால் கடும் பணிச்சுமையுடன் அவர்களின் குடும்பமும் அச்சத்தில் உள்ளனர். ஆகவே உடனடியாக கொரோனா தடுப்பு பணியில் முன்னணியில் ஈடுபடும் வருவாய்த் துறையினர், சுகாதார துறையினர், ஊராட்சி துறையினர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு தமிழக அரசு என்95 மாஸ்க், நோய்த்தடுப்பு மருந்துகள் மற்றும் கையுறை கிருமி நாசினி போன்றவற்றை போதிய அளவில் உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.