Home செய்திகள் கடையநல்லூர் தற்காலிக தினசரி சந்தையில் எம்.எல்.ஏ திடீர் ஆய்வு.

கடையநல்லூர் தற்காலிக தினசரி சந்தையில் எம்.எல்.ஏ திடீர் ஆய்வு.

by mohan

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பேட்டை பகுதியில்  தற்காலிகமாக செயல்படும் தினசரி மார்க்கெட்டை கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முகமது அபுபக்கர் ஆய்வு மேற்கொண்டார்.அதை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு காய்கறிகள் வழங்க வலியுறுத்தினார்.கொரானொ வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் விதத்தில் அதிக அளவில் மக்கள் கூடுவதை தடுக்கும் விதத்தில் கடையநல்லூர் நகராட்சி சார்பில் செயல்பட்ட  தினசரி மார்க்கெட் மூடப்பட்டது. அதற்குப் பகரமாக நகர் முழுவதும் 7 இடங்களில் தற்காலிக சந்தைகள் செயல்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியான கடையநல்லூர் பேட்டை பகுதியில் நகராட்சி பள்ளிக்கூடம் அருகே செயல்படும் சாலையோர தினசரி சந்தையை கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அபூபக்கர் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டு காய்கறிகள் குறித்தும் விலைவாசி நிலைகளையும் கேட்டறிந்தார்.அப்பொழுது சாலை ஓரம் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் அந்த வியாபாரிகள் வெயில் காலங்களிலும் மழைக் காலங்களிலும்  எங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. ஆகவே  இந்த தினசரி சாலையோர மார்க்கெட்டை நிரந்தரமாக ஆக்கி எங்களுக்கு பாதுகாப்பான முறையில் வியாபாரம் செய்ய உதவுமாறு கேட்டுக் கொண்டனர்.

அதன் பின்னர் அங்கே செயல்படும் அனைத்து கடைகளிலும் சுமார் 50 ரூபாய் மதிப்பில் 2.5 கிலோ காய்கறிகளை வாங்கி அதனை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி சார்பில் ஏழை எளிய மக்களுக்கு வழங்குமாறு அறிவுறுத்தியதன் பேரில் முஸ்லிம் லீக் இளைஞர் அணியினர் ஏழை எளியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு இந்த காய்கறிகளை வழங்கினர். அப்போது மாவட்ட செயலாளர் முகமது இக்பால் ,நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் சையது மசூது,  நகர செயலாளர் அப்துல் லத்தீப்,   ரஹ்மத்துல்லா பாட்டத்து கடாபி ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!