Home செய்திகள் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு மாற்றுத்திறனாளிகளின் வேண்டுகோள்..

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு மாற்றுத்திறனாளிகளின் வேண்டுகோள்..

by mohan

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பல்வேறு வழக்குகளுக்காக பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நூற்றுக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் வெயிலிலும் மழையிலும் நனைந்து துருப்பிடித்து யாருக்கும் பலனளிக்காமல் போவதற்கு வாய்ப்பிருக்கிறது.இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் தங்களின் தேவைக்காக மூன்று சக்கர மோட்டார் பைக் வேண்டி மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தால் பல்வேறு விதிமுறைகளை காரணம் காட்டி பைக் தர மறுக்கிறார்கள்.கடுமையாக ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே பைக் வழங்குகிறார்கள். பைக் இல்லாத காரணத்தால் சொந்தமாக தொழில் செய்யவோ அல்லது வேலைக்கு செல்லவோ முடியாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடக்க வேண்டிய அவல நிலை மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளது.

எனவே, இவ்வாறு கைப்பற்றப்படும் இருசக்கர வாகனங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கினால் அதில் மூன்று சக்கரங்களை பொருத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைத்து பயன்படுத்த ஏதுவாக இருக்கும். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் பைக் வழங்க இயலாது என நிராகரிக்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு இது ஒரு தற்க்காலிக தீர்வாக அமையும். எனவே, மாற்றுத்திறனாளிகளின் இந்த கோரிக்கையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் பரிசீலித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் P. செல்வநாயகம் – மாவட்ட தலைவர்,S. பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!