Home செய்திகள் நெல்லை மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் திடீரென அதிமுகவிற்கு தாவல்

நெல்லை மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் திடீரென அதிமுகவிற்கு தாவல்

by mohan

நெல்லை மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் நேற்று இரவு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார்.அ.தி.மு.க.வில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்ட கருப்பசாமிபாண்டியன், தனது 25-வது வயதிலேயே 1977-ம் ஆண்டு நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். பின்னர், அவருக்கு கட்சியில் நெல்லை மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆலங்குளம், பாளையங்கோட்டை, தென்காசி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். கட்சியில் துணைப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்தார். இந்தநிலையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கட்சியை விட்டு விலகி தி.மு.க.வில் இணைந்தார்.

தி.மு.க.விலும் அவருக்கு நெல்லை மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர், தி.மு.க. தலைமையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, 2015-ம் ஆண்டு கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதனால் 2016-ம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார்.  அ.தி.மு.க.வின் பின்னணியில் இருந்த சசிகலா, டி.டி.வி.தினகரனால் ஓரங்கட்டப்பட்டார். இந்த நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. தலைமையை சசிகலா கைப்பற்றிய நேரத்தில், அக்கட்சியை விட்டு விலகி மீண்டும் 2018-ம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்தார். தற்போது, தி.மு.க.வை விட்டு விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார்.நேற்று இரவு சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் இல்லங்களுக்கு சென்று, அவர்களை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி அ.தி.மு.க.வில் தன்னை கருப்பசாமிபாண்டியன் மீண்டும் இணைத்துக் கொண்டார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!