Home செய்திகள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு-கடையநல்லூர் முன்னாள் எம் எல் ஏ அதிமுகவிலிருந்து திடீர் விலகல்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு-கடையநல்லூர் முன்னாள் எம் எல் ஏ அதிமுகவிலிருந்து திடீர் விலகல்

by mohan

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் நயினா முகம்மது. இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2001 வரை திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 2004-ல் திமுகவிலிருந்து விலகி அதிமுக வில் இணைந்தார்.அதிமுகவில்,சிறுபான்மை பிரிவு செயலாளராகவும், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் நாடு முழுவதும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறி அதிமுகவிலிருந்து திடீரென விலகினார்.

இது குறித்து அவர் கூறுகையில் அதிமுகவின் செயல்பாடுகள் அனைத்தும் மத்திய பா.ஜ.க மதவாத அரசின் ஊது குழலாக உள்ளது. சமீபத்தில் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்த போது அதனை எதிர்த்து வாக்களிக்காமல் அதனை நிறைவேற்ற ஆதரித்து அதிமுக எம்பிகள் வாக்களித்துள்ளனர். இதனை கண்டித்தும்,இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிமுகவிலிருந்து விலகுகிறேன் என்றார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!