முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் (MYFA) சார்பாக மின்னொளி கைப்பந்து போட்டி..

கீழக்கரை புதுத்தெருவை மையமாக கொண்டு பல சமுதாய மற்றும் மார்க்க சேவைகளை செய்து வரும் முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் (MYFA) சார்பாக இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவித்து, அவர்களின் தனித்திறமைநை வெளிஉலகுக்கு கொண்டு வரும் வண்ணம் 09/04/2018 மற்றும் 10/04/2018 ஆகிய நாட்களில் மின்னொளி கைப்பந்து போட்டி நடத்த உள்ளனர்.

இப்போட்டி இரவு 07.00 மணி முதல் நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் வெற்றி பெரும் அணிக்கு 15,000/-, 12,000/-, 8,000/- 5,000/- என முதல். பரிசில் இருந்து நான்காம் பரிசுகள் வரை முறையே கொடுக்கப்பட உள்ளது.

அப்போட்டியில் கலந்து கொள்ள ₹.500/- நுழைவுக்கட்டணம் செலுத்து வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டிகள் புதுத்தெரு குளத்துமேடு மைதானத்தில் நடைபெற உள்ளது.