
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் சார்பாக நடைபெற்று வரும் மதுரை விற்பனை குழுவிற்கு உட்பட்ட வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் கடந்த இரு மாதங்களாக ஒவ்வொரு வாரம் புதன்கிழமை தோறும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று(21.10.2020) நடைபெற்ற ஏலத்தில் வாடிப்பட்டி சோழவந்தான் மற்றும் சுற்றுப்புறத்தை சேர்ந்த 13 விவசாயிகளின் 10454 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்திற்கு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் T.G.வினய் தலைமை தாங்கினார். V.மெர்சி ஜெயராணி ஏல நடைமுறையினை பற்றி விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு விளக்கமாக கூறினார். இந்த ஏலத்தில் 10 வியாபாரிகள் பங்கு பெற்றனர். இதனால் அதிகபட்சமாக விலையில் தேங்காய் ஓன்று ரூ 14.20 வரை ஏலம் போனது. மேலும் 1.31 லட்சம் ரூபாய் உடனடியாக வியாபாரிகளிடம் இருந்து பெற்று விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. இதன்மூலம் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர், மேலும் வியாபாரிகளுக்கு தரமான தேங்காய்கள் ஏலத்தில் கிடைத்ததன் மூலம் மகிழ்ச்சி அடைந்தனர்.
வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.