முகம்மது சதக் ஹமீது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிறுவனர் தினம் மற்றும் மாணவர் ஆட்சிகுழு அமைப்பு தொடக்க விழா ..

முகம்மது சதக் ஹமீது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 19.9.2018 அன்று கல்லூரி கருத்தரங்கு மண்டபத்தில் காலை 11.00 மணியளவில் நிறுவனர் தினம் மற்றும் மாணவர் ஆட்சிகுழு அமைப்பு தொடக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் மாணவி பாரிக்கா பர்வின்  இறைவணக்கத்துடன் தொடங்கிங்கியது.  அதனை தொடர்ந்து திருமதி அன்வர் ரொ ஷாகீன் கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர் மற்றும் உதவி பேராசிரியர் வரவேற்புரை வழங்கினார். அதனை தொடர்ந்து முதல்வர் A.R நாதிரா பானு கமால் தலைமையுரையினை வழங்கி அறக்கட்டளையின் வரலாறுகள் மற்றும் கல்லூரிகளின் சாதனைகள் மற்றும் குறிக்கோள்களின் ஒரு மிகுந்த குறிப்புடனும் தன்னுரையை எழுச்சியூட்டும் மேற்கோள்கள் மூலம் “என் வாழ்க்கையை மாற்றுவதற்கு என்னால் மட்டுமே முடியும்” என்று கூறி மாணவிகளுக்கு உரையாற்றினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திருமதி.குணசேகரி மாவட்ட சமூக நல அலுவலர் பரமக்குடி தாலுகா இராமநாதபுரம் அவர்களுக்கு நிறுவனர் தினம் மற்றும் மாணவர்ஆட்சிகுழு அமைப்பு தொடக்க விழாவில் கல்லூரி நிர்வாகம் நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தது. அதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் உலக வாழ்க்கையின் நுட்பங்களை கற்று தேரவும், பற்பல நூல்வகை கற்கவும், பெண்கள் நாற்றிசை நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்று பாரதியாரின் பாடலை பாடி பெண்களின் எழுச்சிக்கும், உயர்வுக்கும், ஏற்ற வழிமுறைகளைக் குறிப்பிட்டுள்ளார்.

நமது மாவட்டத்தின் அடையாளமாக அப்துல்கலாமின் திறமைகள் மூலம் உலகெங்கும் பரவியது போல மாணவர்களும் தங்களது திறமைகளை வெளிக்கொணர வேண்டும் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி குழந்தை திருமணம் மற்றும் பெண்கள் அதிகாரம் பற்றியும் மாஸ்லோவின் கோட்பாடு உடற்கூறு பாதுகாப்பு அன்பு, சுய அங்கிகாரம் போன்ற கோட்பாடுகளையும் நன்கு விளக்கி சுய அங்கீகார அரங்கத்தை நோக்கமாக கொண்ட மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

2018-19 கல்வியாண்டிற்கானமாணவர் ஆட்சி குழுவின் தலைவர் துணைத்தலைவர், செயலாளர் என்று திருமதி. எம். ரெய்ஹானத்தில் அதவியா அரபித்துறை தலைவர் மற்றும் உதவி பேராசிரியர் மற்றும் மாணவர் ஆட்சிகுழு அமைப்பு ஆலோசகர்  மாணவிகள் அமைப்பினை தொடங்கி ச. பாத்திமா மரியம் ஆங்கிலத்துறை மாணவி தலைவராகவும், மாணவி மு.பாரிகா பர்வின் வணிகவியல் மற்றும் கணினிபயன்பாட்டியல் துறை மாணவி துணை தலைவராகவும், ச.ரேஸ்மா கணிதவியல் துறை மாணவி செயலாளராகவும் அறிவித்தார்.

நிறுவனர் தினம் முன்னிட்டு ஆங்கில கவிதை ஒப்புத்தல், ரங்கோலி கோலம், தனிநபர் பாடல், ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு, சிறப்பு விருந்தினர் அவர்கள் பரிசுகள் வழங்கினார்.

இறுதியாக திருமதி.மெஹருன் நிஸா ஆங்கிலத்துறை தலைவர் மற்றும் உதவி பேராசிரியர் அவர்கள் நன்றியுரை கூற இந்நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.