Home செய்திகள் கீழக்கரை “முஹம்மது சதக் பொறியியல்” கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்(1994-98) சந்திப்பு நிகழ்ச்சி ..

கீழக்கரை “முஹம்மது சதக் பொறியியல்” கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்(1994-98) சந்திப்பு நிகழ்ச்சி ..

by ஆசிரியர்

கீழக்கரை “முஹம்மது சதக் பொறியியல்” கல்லூரியின் “1994-98 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி” முஹம்மது சதக் அறக்கட்டளை இயக்குநர் ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லா தலைமையிலும், கல்லூரி முதல்வர் முனைவர். அப்பாஸ் மைதீன் மற்றும் கல்லூரி டீன். முனைவர் முஹம்மது ஜஹாபர் முன்னிலையிலும் நடைபெற்றது.  முன்னாள் மாணவர் முஸ்தகீன் அனைவரையும் வரவேற்றார். முஹம்மது சதக் அறக்கட்டளை இயக்குநர் தனது தலைமையுரையில் முன்னாள் மாணவர்களாகிய நீங்கள் உங்களுக்குள் ஒரு அறக்கட்டளையை உருவாக்கி அதன் மூலம் இந்த கல்லூரியில் அதிக மதிப்பெண் பெற்று படித்துக்கொண்டிருக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதற்கு உதவி புரிந்தால் மாணவர்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கு வழிவகை செய்யலாம் என அறிவுரை வழங்கினார்.

கல்லூரி முதல்வர் தனது சிறப்புரையில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நாம் அனைவருக்கும் பழைய கல்லூரி நினைவுகளை நினைவுக்கு கொண்டு வருகிறது. இந்நிகழ்ச்சி பல துறைகளில் சிறந்து விளங்குகின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி மூலம் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவதற்கு மிக சிறந்த சந்தர்ப்பமாக அமைகிறது மேலும் அவர்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொள்வதற்கு என்ன என்ன முயற்சிகள் எடுக்க வேண்டும் என்ற வழி முறைகளையும் கற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் 140க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.  விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் தாங்கள் கல்வி பயின்ற இக்கல்லூரியின் அனுபவங்களையும, நினைவு கூர்ந்தனர். மேலும் தாங்கள் பயின்ற காலத்தில் கல்லூரியில் பணியாற்றிய முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் அன்றைய நூலகம், ஆய்வகங்கள் தங்களது கல்விக்கு எவ்வாறு உதவியது என்பதையும் எடுத்துரைத்தனர்.

பல முன்னாள் மாணவர்கள் தாங்கள் பலதுறைகளில் சிறந்து விளங்குவதையும், தொழில் துறைகளில் முன்னேறியுள்ளதையும், அதற்கு தங்களுடைய தொழிற்கல்வி உதவியதையும் எடுத்துரைத்தனர். மேலும் நாம் வெற்றியடைய வேண்டுமெனில, ஒரு குறிக்கோளை வகுத்து கொண்டு, அதில் வெற்றியடைய வேண்டுமென்ற சிந்தனையுடனும், தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சி மற்றும் கடின உழைப்புடனும், செயல்பட்டால் நாம் எண்ணிய வெற்றியை அடைய முடியும் என்றும் மேலும் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க ஆவண செய்வதாக உறுதியளித்தனர்.

இந்நிகழ்சியில் கல்லூரி முன்னாள் பேராசிரியர்களும்இ தற்பொழுது முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வருமான அலாவுதீன்,  தற்பொழுது செய்யதம்மாள் பொறியியல் கல்லூரி கணித பேராசிரியை தேன்மொழிஇ தற்பொழுது ஜாஸ்மின் மென்பொருள் நிறுவன உரிமையாளர் ஜெயசீலன் தற்பொழுது கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி துணை முதல்வர் முனைவர் அழகிய மீனாள் ஆகியோர் கலந்து கொண்டு முன்னாள் மாணவர்களை வாழ்த்தினர்.

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் பாலசுப்பிரமணியன் நன்றியுரை வழங்கினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி, முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் செயலாளர் வெங்கடேஷ் பாபு மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நஜ்முதீன் செய்திருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!