இராமநாதபுரம், ஆக.25 -இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் குப்பானிவலசை தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்ட விழா நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நலம், சுதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்ட உணவு வழங்கி பள்ளி மாணவ, மாணவியருடன் சேர்ந்து சாப்பிட்டார். இதனை தொடர்ந்து மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 30 பள்ளிகள், 7 பேரூராட்சிகளில் 24 பள்ளிகள், 11 ஊராட்சி ஒன்றியங்களில் 868 துவக்க, நடுநிலை ப்பள்ளிகள் என 922 பள்ளிகளைச் சேர்ந்த 40 ஆயிரத்து 519 மாணவ, மாணவியர் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் பயன் பெறுகின்றனர் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார். நவாஸ் கனி எம்பி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன், கருமாணிக்கம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப், உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவன்னி, மண்டபம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ஒன்றிய கவுன்சிலர் தௌபீக் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் வள்ளல் பாரி நடுநிலைப்பள்ளியில் நகராட்சி தலைவர் ஆர்.கே.கார்மேகம் தொடங்கி வைத்தார் நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன், நகராட்சி துணைத் தலைவர் டி.ஆர் பிரவீன் தங்கம் , நகராட்சி செயற் பொறியாளர் ரெங்கராஜன், நகர்மன்ற உறுப்பினர்கள் மணிகண்டன், ராமநாதன், ஜெயராமன், வீரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ராமேஸ்வரம் நகராட்சி துவக்கப்பள்ளியில் நகராட்சி தலைவர் நாசர்கான் துவங்கி வைத்தார். மண்டபம் காந்தி நகர் நடுநிலைப்பள்ளியில் பேரூராட்சி தலைவர் டி.ராஜா துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியை பிரான்சிஸ் மேரி, பேரூராட்சி உறுப்பினர்கள் என்.பூவேந்திரன், எம். சித்ரா தேவி, பள்ளி மேலாண் குழு தலைவர் கோடீஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.
You must be logged in to post a comment.