![IMG-20170320-WA0055[1]](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2017/03/IMG-20170320-WA00551.jpg?resize=678%2C381&ssl=1)
கீழக்கரை நகருக்குள் அடிக்கடி வனப்பகுதிகளில் இருந்து திசை மாறி வரும் குரங்குகள் தங்கள் சேஷ்டைகளை காட்டி பொதுமக்களை பயமுறுத்துவதுண்டு. இந்நிலையில் இன்று காலை கீழக்கரை முஸ்லீம் பஜாரில் லூலூ சென்டர் அருகாமையில் மின் கம்பத்தில் ஏறி தன் சேஷ்டையை காட்டி, மின் ஒயரில் சிக்கிய குரங்கு ஒன்று கீழே இறங்க முடியாமல் அலறியது.
உடனே இது குறித்து மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த மின்சார வாரிய ஊழியர் பொன்ராஜ் மின் கம்பத்தில் ஏறி குரங்கினை பத்திரமாக உயிருடன் மீட்டு கால்நடை மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு குரங்கிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு நல்ல முறையில் வழியனுப்பி வைக்கப்பட்டதாக தெரிகிறது.
You must be logged in to post a comment.