கீழக்கரையில் குரங்குகளை பிடிக்க கூண்டுகள் தயார் – வனத் துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர ‘சட்டப் போராளிகள்’ வேண்டுகோள்

கீழக்கரையில் சமீப காலமாக காட்டுக் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்த வண்ணம் உள்ளது. கீழக்கரை நகரில் மரங்கள் அடர்ந்த பகுதி இல்லாததால் கூட்டமாக திரியும் இந்த குரங்குகள் கூட்டம் நெருக்கமாக கட்டப்பட்டிருக்கும் வீடுகளுக்குள் புகுந்து அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட சமையல் பொருள்களை சூறையாடி வருகிறது. மேலும் கைக் குழந்தைகளும், பள்ளி செல்லும் சிறுவர்களும் தாவித் திரியும் இந்த குரங்குகளை கண்டு அஞ்சி நடுங்கி வருகின்றனர்.

இதனால் பொதுமக்களுக்கு இடையூராக இருக்கும் காட்டு குரங்குக்களை அகற்ற மாவட்ட ஆட்சியர் அவர்களின் மக்கள் குறைதீர்க்கும் நாளில் மக்கள் நல பாதுகாப்புக் கழகம் மற்றும் கீழக்கரை சட்ட போராளிகள் இயக்கம் சார்பாக மனு அளித்த அடிப்படையில் கீழக்கரை வன காப்பக அதிகாரிகள் குரங்குகளை பிடிக்க பரமக்குடி வன காப்பகத்தில் இருந்து கூண்டுகளை வரவழைத்துள்ளனர். இந்த கூண்டுகளை குரங்குகள் அதிகம் நடமாடும் தெருக்களில் வைத்து குரங்குகளை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் முதலாவதாக குரங்கு பிடிக்கும் கூண்டு வைப்பதற்கு, குரங்குகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியான மேலத்தெரு புதுப் பள்ளிவாசல் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. இன்னும் வேறு எந்தெந்த பகுதிகளில் இந்த குரங்கு பிடிக்கும் கூண்டுகளை வைக்க வேண்டும் என பொதுமக்கள் ஆலோசனை தெரிவிக்குமாறு கீழக்கரை சட்டப் போராளிகள் இயக்கத்தினர் மற்றும் கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தினர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியரிடம் தரப்பட்ட மனுவின் அடிப்படையில் குரங்குகளை பிடிக்க தயார் நிலையில் இருக்கும் குரங்கு கூண்டுகளை சட்டப் போராளிகள் முகைதீன் இபுறாகீம், பாபா பக்ருதீன், சாலிஹ் ஹுசைன் பார்வையிட்டு கீழக்கரை வன உயர் அதிகாரி சிக்கந்தர் பாட்சாவிடம் ஆலோசனை நடத்தினர். கீழக்கரை நகரில் குரங்கு பிடிக்கும் கூண்டு வைப்பது சம்பந்தமாக பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை கீழ் காணும் அலைபேசி எண்ணில் அழைத்து தெரிவிக்கலாம்.

96776 40305  /  97917 42074  /  78458 19238

உதவிக்கரம் நீட்டுங்கள்..