Home செய்திகள் இராமேஸ்வரத்தில் அதி நவீன மீட்பு படகு வேண்டி தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு இராமேஸ்வரம் தீவு பேரிடர் மேலாண்மை குழு ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை:

இராமேஸ்வரத்தில் அதி நவீன மீட்பு படகு வேண்டி தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு இராமேஸ்வரம் தீவு பேரிடர் மேலாண்மை குழு ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை:

by mohan

இராமேஸ்வரத்தில் அதி நவீன மீட்பு படகு வேண்டி தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு இராமேஸ்வரம் தீவு பேரிடர் மேலாண்மை குழு ஒருங்கிணைப்பாளர் சிக்கந்தர் கோரிக்கை- இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவு ஆனது மீன்பிடி தொழில் பிரதானமாக கொண்ட அதிக மீனவர்கள் வாழும் பகுதியாக உள்ளது. இங்கு பிடிக்கப்படும் மீன் வகைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலவாணி ஈட்டுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. அதிக அளவில் விசைப்படகு நாட்டுப் படகுகள் பலவும் கொண்டு மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் வேலையில் புயல், சூறாவளி, கடல் கொந்தளிப்பு, காற்றின் வேகம் அதிகரித்தல் போன்ற இயற்கை சீற்றங்களாலும், மற்றும் இயந்திரக் கோளாறு, படகில் ஏற்படும் விரிசல் போன்ற காரணங்களால் ஆழ் கடலில் மீனவர்களின் படகு மூழ்கி மீனவர்கள் உயிரிழக்கும் நிலை தொடர்ந்து ஏற்படுகிறது.ஒரு மீனவனின் உயிரிழப்பு ஒரு மீனவக் குடும்பத்தின் பேரிழப்பு.எனவே தகவலறிந்து அவர்களை உடனடியாக மீட்க அதிநவீன மீட்பு படகுகள் எதுவும் இல்லை. மீனவர்களின் உயிரிழப்பை தடுக்க மாநில பேரிடர் மேலாண்மை குழு சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இந்த கோரிக்கையை ஏற்று கடலில் தத்தளிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்டு வர அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்ட மீட்பு படகு ஒன்றை இராமேஸ்வரம் துறைமுகத்தில் நிறுவி மீனவர்களின் உயிரிழப்பை தடுக்க வழிவகை செய்யும்படி அனைத்து மீனவ மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!