அயல்நாட்டு குளிர்பான எதிர்ப்பு பதாகையோடு வந்த ம.ஜ.க தமிமுன் அன்சாரி

நேற்று தமிழக சட்டசபைக்கு வந்த மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், அவைக்கு நுழைவதற்கு முன்பு “2017, பிப்ரவரி 1 முதல் கோக், பெப்சி குடிப்பதை நிறுத்திவிட்டேன். வணிகச் சங்கங்களின் கோரிக்கை வெல்லட்டும்” என்ற பதாகையோடு வந்தார்.

அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் – இளைஞர்கள் போராட்டம் நடத்தியப்போது பெப்சி, கோக் பானங்களுக்கு எதிராகவும் முழக்கமிட்டார்கள்.

அதன் விளைவாக மார்ச் 1 முதல் வணிகர் சங்கங்கள் இனி பெப்சி, கோக் விற்கக்கூடாது என வணிகர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதை ஆதரிக்கும் விதமாக, இன்று எனது நிலைபாட்டை தெரிவித்தேன் என்று கூறினார்.

வெல்லட்டும் அவர் முயற்சி…

உதவிக்கரம் நீட்டுங்கள்..

1 Comment

Comments are closed.