இராமநாதபுரம் தொகுதி அதிமுக., சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் பாம்பன் அண்ணா திடலில் நடந்தது. இதில் தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் எம். மணிகண்டன் பேசுகையில்: மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா நல்லாசியால் நடக்கும் நல்லாட்சியை கலைக்க ஸ்டாலின் கபட நாடகம் அரங்கேறாமல் போனதால் அவர் குழப்பத்தில் உள்ளார். அரசு வழங்கிய பொங்கல் பரிசு ரூ.1000 ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்க விடாமல் தடுக்க நீதிமன்றம் மூலம் தடை பெற்றார். இதில் அவரது இரட்டை வேடம் பொய்த்தது. அதிர்ந்து பேசாத முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கொலை பழி சுமத்தி இருப்பது நகைச்சுவையாக உள்ளது. திமுகவை அழிக்க அழகிரி ஒருவரே போதும். இலங்கை தமிழர் பிரச்னையில் சிங்கமாக கர்ஜித்த வைகோ தற்போது அடங்கி விட்டார். ஸ்டாலினுக்கு முதல்வர் ஆகும் யோகம் அவரது ஜாதகத்தில் இல்லை. ஸ்டாலின் அஞ்சு நிமிஷம் தொடர்ச்சியாக இங்கிலீஷ் பேசிவிட்டால் நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார். இவ்வாறு அவர் பேசினார்.
திரைப்பட நடிகை பபிதா, தலைமை கழக பேச்சாளர் ராமசுப்ரமணி, மாவட்ட அவைத் தலைவர் செ. முருகேசன், சிறுபான்மை பிரிவு செயலாளர் தர்வேஸ், மண்டபம் ஒன்றிய செயலாளர் தங்கமரைக்காயர், மாவட்ட விவசாய அணி செயலாளர் வீரபத்திரன், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் அர்ச்சுனன், அரசு வழக்கறிஞர் கருணாகரன், ராமநாதபுரம் ஜெயலலிதா பேரவை நகர் செயலாளர் முத்துப்பாண்டி, முன்னாள் தொகுதி செயலாளர் தஞ்சி சுரேஷ், மாணவரணி செயலாளர் புனிதன், பாம்பன் ஜெ., பேரவை செயலாளர் அலெக்ஸ், கடலாடி ஒன்றிய துணைச் செயலாளர் சண்முக பாண்டியன், ராமநாதபுரம் பாலசுப்ரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.
செய்தி:முருகன், இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.