நெல்லை தென்காசி மாவட்டங்களில் ஒண்டி வீரன் நினைவு தினம்-அமைச்சர், ஆட்சியர்கள் மாலை அணிவித்து மரியாதை..

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவிடத்தில் அமைச்சர் ராஜலெட்சுமி, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்சுந்தர் தயாளன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும் செவல் பச்சேரியில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவிடம் உள்ளது. ஒண்டிவீரனின் 249வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு ஒண்டிவீரன் நினைவிடத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் ஆகியோர் சென்று ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ.,முருகசெல்வி, வாசுதேவநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, சிவகிரி வட்டாட்சியர் ஆனந்த், துணை வட்டாட்சியர்கள் மைதீன் பட்டாணி, சரவணன், வருவாய் ஆய்வாளர்கள் கூடலூர் பாக்கியலெட்சமி, சிவகிரி முத்துக்குமார், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் வாசுதேவநல்லூர் மூர்த்திபாண்டியன், சங்கரன்கோவில் ரமேஷ், முன்னாள் தொழிற்சங்க தலைவர் துரைபாண்டியன், பேரூர் அதிமுக செயலாளர்கள் வாசுதேவநல்லூர் சீமான் மணிகண்டன், ராயகிரி சேவுகபாண்டியன், சிவகிரி காசிராஜன், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் மாங்கனி முருகையா, புளியங்குடி நகர செயலாளர் பரமேஸ்வர பாண்டியன், களஞ்சியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும்,நெல்லையில் மாவீரன் ஒண்டிவீரன் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள மாவீரன் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் இன்று நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

அவரின் திருவுருவ சிலைக்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் நாராயணன், ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பத்துரை, நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிராபகர் சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்