இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பூபதி தலைமையில் தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.
அது பற்றி பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை அனைத்து ஜமாத் தலைவர்களுடனும், கீழக்கரை வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் ஹோட்டல் மற்றும் திருமண மண்டபம் உரிமையாளர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது.
அரசு அறிவித்த விதிமுறைகளை கடைப்பிடிக்கவும் திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு அதிகளவில் பொதுமக்கள் வராமல் அவர்களுக்கு அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டது.
சனிக்கிழமை அன்று மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தின் போது நகராட்சி தலைமை பொறியாளர் மீன் அலி, நகர்புற வரைபட ஆய்வாளர் ஹபிப், சுகாதார மேற்பார்வையாளர் சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
You must be logged in to post a comment.