இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செய்தியாளர்கள் மற்றும் அத்துறை சார்ந்தவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்..

இன்று (23.04.2017) செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் மருத்துவத் துறை சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செயதியாளர்கள் மற்றும் அத்துறை சார்ந்தவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி அவர்கள் முன்னிலை வகித்தார்.

தமிழக அரசு பத்திரிகையாளர்களின் நலனை கருதத்தில் கொண்டு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் பத்திரிகையாளர்களுக்கு மாவட்ட அளவில் இலவச மருத்துவ முகாம் நடத்திட உத்தரவிடப்பட்டது, அதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் அதன் தொழில் சார்ந்த நிபுனர்களுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இம்மருத்துவ முகாமில் பங்கேற்றவர்களுக்கு அனைத்து வகையான பரிசோதனைகளும் செய்யப்பட்டு, தேவைபட்டவர்களுக்கு மேல் சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இம்மருத்துவ முகாமில் பல் துறை மருத்துவ நிபுனர்களும் கலந்து கொண்டு செய்தியாளர்கள், புகைப்படகக்கார்ர்கள், ஒளிப்பதிவாளர்கள், அதன் தொழில் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..